பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள் அந்த படங்களிலும் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் மக்கள் மனதில் வெகு பிரபலம் ஆகி விடுகின்றனர். அதிலும் அந்த நடிகர்களின் சிறுவயது கதாபாத்திரத்தில் அவர்களை பிரதிபலிப்பதை போலவே சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மற்றும் சினிமா உலகில் தன்னை அடையாளபடுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பல குழந்தை நட்சத்திரங்கள் தெனனிந்திய முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அருந்ததி .இந்த படம் அந்த ஆண்டின் சிறந்த த்ரில்லர் மற்றும் ஆக்சன் படமாக அமைந்தது.

மேலும் இந்த படம் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் அதற்கு எதிராக இழைக்கப்படும் நியதிகளை மையமாக வைத்து விழிப்புணர்வு படமாக அமைந்து இருந்தது. இந்த படத்தில் கதாநாயகியாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தார். இவர் இந்த படத்திற்கு முன்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் மாடர்ன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இந்த படத்தில் முழுவதும் மாறுபட்ட ஒரு புரட்சி மிகுந்த ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். மேலும் இவரை தொடர்ந்து இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சோனு சூட் நடித்திருந்தார்.

மேலும் மனோரமா சாயாஜி ஷிண்டே என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் இந்த படத்தில் சிறுவயது அனுஷ்காவாக வந்து ஆக்சன் காட்சிகளில் கலக்கியவர் திவ்யா நாகேஷ். இவரது கதாப்பாத்திரம் அந்த படத்தில் பெருமளவு பேசப்பட்டதோடு இவருக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் பெற்று தந்தது.

மேலும் இவர் இந்த படத்திற்கு முன்னர் தெலுங்கில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்த போதிலும் இவருக்கு இந்த படம் தான் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனி ஒரு அடையாளத்தை பெற்று தந்தது. இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் வளர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்நிலையில் 33-வயதாகும் திவ்யா அவர்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here