இராட்சசன் திரைப்படம்  என்றதும் நமக்கு முதலில் ஞாபகம் வருவது கிறிஸ்டோபர் என்றார் இன்னொருவர் அம்மு என்கிற அம்மு அபிராமி தான். தனது யதார்த்த மான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி கொண்டார்.இதில் அபிராமியின் நடிப்புத்திறமை மெருகேறியிருந்தது என்றால் மிகையாகது.20 வயதான அம்மு அபிராமி 2017-ல் என் ஆளோட செருப்ப காணோம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.கார்த்தியின் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தங்கை வேடத்தில் நடித்தார்.அதன்பின் துப்பாக்கி முனை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இராட்சசன் மற்றும் மாரியம்மாவாக நடித்த அசுரன் திரைப்படம் இவரது திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.தேசிய விருதை வென்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்,மஞ்சு வாரியர் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த அசுரன் திரைப்படம்.வரலாறு காணாத வெற்றி கண்டது.இதில் தனுஷ் க்கு ஜோடியாக அம்மு அபிராமி நடித்திருந்த கதாபாத்திரம் மக்களிடையே பெரும் புகழைப் பெற்றது.

அம்மு அபிராமி வரும் காட்சிகள் மக்களின் மத்தியில் பலத்த கைதட்டல் களை பெற்று தந்தது.இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் இயல்பான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த அம்மு அபிராமி தெலுங்கில் தன் கவர்ச்சியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க எண்ணியதாலோ என்னவோ FCUK எனும் தெழுங்கு படத்தில் தன் தாராளத்தைக் காட்டியுள்ளார்.

அந்த படத்தில் வெளியான பாடல் தன் கவர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார்.தமிழில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த அம்மு அபிராமி தெழுங்கில் கவர்ச்சியாக மாறியது அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் தமிழில் தேவயானியாக நடிக்கும் சில நாயகிகள் வேறு மொழிகளில் நமீதாவாக நடிப்பது இயல்பு போலும்.அதேபோல் அம்மு அபிராமியும் கிளாமராக மாறியிருக்கக்கூடும் என்று அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here