Author: Voice Kollywood

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பிரபல இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரையரங்குகளில் மாபெரும் வெற்றியுடன் ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த படம் வெளியான சில நாட்களிலேயே வசூல் ரீதியாகவும் மற்றும் பல வகைகளிலும் பல படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா , காளிதாஸ் உட்பட பல முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து உள்ளார்கள். மேலும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க பிரபல இசையமைப்பளார் அனிருத் இசையமைத்து கலக்கியிருக்கிறார். இந்த படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு வெற்றியை கொடுத்த நிலையில் சொல்லமுடியாத சந்தோஷத்தில் இருக்கும் கமல் அவர்கள் இந்த படத்தில் பணிபுரிந்த பலருக்கும் தனது அன்பை வெளிபடுத்தும் விதமாக பல பரிசுகளை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்த…

Read More