அவனே ஸ்ரீமன் நாராயணா படம் எப்படி இருக்கு – திரை விமர்சனம்!

1367

கடந்த வருடம் கனட திரையுலகில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தபடம் KGF. இந்த படம் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டது. இதனையடுத்து அதே பாணியில் மொழிபெயர்கப்பட்டு வெளிவந்த திரைப்படம்தான் அவனே ஸ்ரீமன் நாராயணா. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவத்சவா ஆகியோர் நடிக்க புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது, மேலும் இந்த படத்தினை சச்சின் ரவி இயக்க அனீஸ் லோக்நாத் இந்தபடத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் கதை மற்றும் திரைகதை பெரியதாக எடுபடவில்லை என்றாலும் இயக்குனர் சச்சின் ரவி மேக்கின்கில் நல்ல கவனம் செலுத்தியுள்ளார். மேலும் இந்த படம் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் என்ற படத்தை போலவே இருப்பதை சில இடங்களில் காணலாம்.

இந்த திரைப்படம் முழுவதும் கற்பனை கதை, அதாவது அமராவதி என்ற கற்பனை நகரில் அந்த கால கொள்ளையர்களின் அட்டகாசம் நிறைந்து இருக்கிறது. ஒரு புதையலை தேடி வெகு நாட்கள் அலையும் அந்த கொள்ளை கும்பலுக்கு முன்பாகவே ஒரு நாடக குழு அந்த புதையலை கொள்ளையடித்து விடுகிறது.. இதனால் கோபமான கொள்ளையர்களின் தலைவன் அந்த குழுவில் பலரையும் பிடித்து கொன்றுவிடுகிறார். பின் அவருக்கு வயதாகி படுக்கையறையில் இருக்க அடுத்த வாரிசு யார் என்று சொல்லாமலே இறந்து விட முதல் மனைவிக்கு பிறந்த மகன் தானே அடுத்த தலைவன் என அறிவித்துகொண்டதுமில்லாமல் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகனை வெளியனுப்பிவிடுகிறார்.

பின் 15 வருடங்களுக்கு பின் அந்த நகருக்கு வரும் ஹீரோ மீதமுள்ள நாடககுழு மூலம் அந்த புதையலை கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் மீதமுள்ள கதை. இந்த படத்திற்கு இசை மேலும் வலு கூட்டுகிறது மேலும் க்ஷித் ஷெட்டி தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here