சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் சிறுவர் சிறுமிகள் வெகு பிரபலமாகி விடுகிறார்கள். அவர்கள் அந்த படங்களில் ஒரு சில காட்சிகளிலேயே தோன்றி இருந்தாலும் தனது இயல்பான நடிப்பாலும் சுட்டிதனத்தாலும் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகின்றனர். மேலும் அந்த காலத்தில் குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்த பல நடிகர் நடிகைகள் தற்போது வளர்ந்து ஆளே மாறிபோய் பல முன்னணி படங்களில் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1976-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் பிரபல கண்ணழகி நடிகை மீனா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அவ்வை ஷண்முகி. இந்த படத்தில் கமல் பெண் வேடத்தில் நடித்து கலக்கியிருப்பார் அந்த வகையில் இவருக்கு ஜோடியாக நடித்த மீனாவுக்கும் இவருக்கும் குழந்தையாக ஒரு குழந்தை நடித்திருக்கும் அந்த குழந்தை வரும் காட்சிகள் அனைத்தும் செம காமெடியாக இருக்கும். இப்படி இருக்கையில் அந்த குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகையின் பெயர் பேபி அன்ரா.

சென்னையை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயது முதலே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார் மேலும் இவர் தனது ஏழு வயது முதலே பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பன்னிரண்டு வயது வரை திரைப்படங்களில் நடித்து வந்த இவர் அதன் பின் படங்களில் நடிப்பதை தவிர்த்து ஆளே காணாமல் போய் விட்டார். இதனை தொடர்ந்து தனது அம்மாவின் ஆணைகிணங்க படிப்பில் முழுகவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

தற்போது பதினெட்டு வயதை கடந்த நிலையிலும் பல பட வாய்ப்புகள் வந்த நிலையிலும் அவரும் அதில் நடிக்க மறுத்துவிட்ட காரணத்தால் அம்மாவின் கட்டாயபடி மாடலிங் மற்றும் எழுத்தாளர் போன்ற பலதுறைகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு மாடல் கம்பெனி ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார் இப்படி இருக்கையில் இவரது சமீபத்திய மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here