தமிழ் சின்னத்திரை தொலைகாட்சியில் பிரபலமான விஜய் தொலைக்காட்சியும் ஒன்றாகும். இந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியால்களுமே இல்லத்தரசிகளின் இடையே ஒரு பெரிய பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளாகவே  உள்ளது. இதில் பாக்கியலக்ஷ்மி எனும் தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்பொழுது சுவாரசியங்கள் நிரம்பிய தொடராக மாறி வருகிறது. ஒரு குடும்ப தலைவி தன்னுடைய குடும்பத்தில் படும் கஷ்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் ஆன பாக்கியலக்ஷ்மி தொடர் தற்பொழுது மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த தொடரில் பாக்கியலக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு  இளைய மகனாக நடித்து வரும் எழில் கதாபாத்திரம் பிக்பாஸ் சீசன் 3-இல் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் கிளாமர் உடையில் எழில் உடன் போடோஷூட் ஒன்றை நடத்தி அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது மக்கள் கண்ணுக்கு விருந்து படைப்பது  போல அமைந்தது. இது ரசிகர்களின் எக்கச்சக்க லைக்குகளை பெற்றிருக்கிறது. இந்த கதாநாயகி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சம்பாரித்தார்.

அந்த படத்தில் இவர் நடித்த புஷ்பா எனும் கதாபாத்திரம் தன்னுடைய பெயரையே மாற்றி ரசிகர்கள் அனைவரும் புஷ்பா என்ரே தன்னை அழைப்பதாக ரேஷ்மா தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படத்தில் ரேஷ்மாவுக்கு ஜோடியாக பரோட்டா சூரி நடிதிருப்பார். அதில் அவரை புஷ்பா புருஷன் என்ற பெயரை கொண்டு அழைப்பார்கள். அந்த பெயர் அவருக்கும் வெளியுலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதாக சூரி ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

தற்பொழுது ரேஷ்மா இந்த சின்னத்திரை நடிகருடன் எடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்துவிட்டு குழப்பத்தில் திகைத்துள்ளனர். இந்நிலையில் ரேஷ்மாவும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் எழிலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அம்மிணி ஏற்கனவே பிக்பாசில் இருக்குபோதும் வெளியில் வந்ததும் பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளாகி வந்தார் இப்படி இருக்கையில் இந்த நிகழ்வு மேலும் இவருக்கு சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here