பொதுவாக சினிமாவில் திரைப்படங்களில்  நடிக்கும் நடிகர் நடிகைகள் அளவுக்கு அந்த படங்களில் பின்னணி பாடகர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர் மற்றும் பல கலைஞர்கள் மக்கள் மத்தியில் தெரியபடுவதில்லை. இதற்கு காரணம் இவர்களது உழைப்பு முழுவதும் திரைக்கு பின்னாலே முடிந்து விடுவதால் இவர்கள் திரையில் வராத காரணத்தால் இவர்களது பெயர் கூட நமக்கு  தெரிவதில்லை. இந்த வகையில் தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் கிட்டத்தட்ட 700-க்கும் மேலான பாடல் வரிகளை எழுதி திரையுலகில் பிரபலமாக இருப்பவர் கவிஞர் சினேகன்.

இவர் இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானதே அதிகம். இந்நிலையில் இதன் மூலம் கமல் ஹாசன் மீது தீராத பற்றுகொண்ட சினேகன் அவரது மக்கள் நீதி மையம் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததோடு அவரது கொள்கைகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்டார். இந்நிலையில் பிக்பாசில் நிகழ்ச்சியில் இருக்கும்போதே ஒரு டாஸ்க்கின் போது சிநேகன் அவர்களின் தந்தை வந்திருந்த போது சினேகனுக்கு திருமண வயதை கடந்த நிலையில் இன்னும் திருமணம் ஆகாமல் இருப்பதை எண்ணி மிகவும் வருத்தப்பட்டார்.

மேலும் பலரும் சிநேகனிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என கேட்டுவந்த நிலையில் சமீபத்தில் இவரது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர் பிரபல சீரியல் நடிகையான கன்னிகா ரவியை தனது மனைவியாக கரம்பிடித்துள்ளர். மேலும் இவர்களது திருமணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலகநாயகன் கமலஹாசன் தலமையில் சிறப்பாக நடந்து முடிந்தது. இவ்வாறு இருக்கையில் திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் எனலாம். காரணம் திருமணம் முடிந்த கையோடு சிவகாசியில் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு எனும் படத்தில் நடித்து வருகிறார் சினேகன்.

மேலும் இந்த படத்தை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திருமண முடிந்த நிலையில் இப்படி ஒரு பட வாய்ப்பு வந்திருப்பது இவரது வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் கன்னிகாவும் சிநேகனும் பல வருடங்களுக்கு முன்னரே காதலித்து வந்ததாக பலதகவல்கள் வெளிவந்த நிலையில் அதை உறுதிபடுத்தும் நிலையில் காதலிக்கும் போது எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தை தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார் கன்னிகா ரவி. இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here