சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் வெகு பிரபலம் அதிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் ராஜாவாக திகழ்வது விஜய் டிவி எனலாம். அந்த அளவிற்கு இந்த சேனலில் பல்வேறு விதமான ரியாலிட்டி ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு தற்போது ஐந்தாவது சீசனில் வெற்றிகரமாக நடைபோட்டு வரும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் எனலாம். அந்த வகையில் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மாறினாலும் இந்த நிகழ்ச்சியின் விறுவிறுப்பு சற்றும் குறையவில்லை .

இந்நிலையில் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பெரும்பாலனோர் புதுமுகங்களாகவே இருக்கும் நிலையில் இதில் சற்று பரிட்சயமான போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கானா பாடகியான இசைவாணி கலந்து கொண்டுள்ளனர். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்த நிலையில் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் அவர்களின் உதவியால் திரைத்துறைக்கு களம் புகுந்து படங்களில் பாடும் வாய்ப்பை பெற்று வருகிறார். இவ்வாறு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்த நிலையிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரவே அதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தன்னை பிரபல படுத்தி கொள்ள எண்ணினார்.

இருப்பினும் பாதி நாட்களே கடந்த நிலையில் மக்களால் வெளியேற்ற பட்ட இசைவாணி வெளியே வந்தபின் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த நிகழ்வுகளை கூறி வந்த இசைவாணி தன்னுடைய வாழ்க்கையை பற்றி கேட்கவே எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டதாக கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். அது கூறித்து கேட்டபோது கடந்த 2019-ம்  ஆண்டு சக ட்ரம்ஸ் கலைஞரான சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் தனக்கு திருமணம் ஆனதை கூறித்து எந்த ஒரு தகவலையும் பிக்பாசில் கூறாததுக்கு காரணம் அவர்களது திருமண வாழ்க்கை விவாகாரத்தில் முடிந்ததே ஆகும்.

இது கூறித்து இசைவாணியின் தோழிகள் கூறியதாவது அவளின் திருமண வாழ்க்கை சரியாக இருக்காது என தெரிந்தும் அவள் எவ்வளவோ அதை இழுத்து பிடித்தால் இருப்பினும் அவர்கள் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில் விவாகரத்துக்கு பின்னர் அவள் மிகுந்த மன வேதனையில் இருந்தாள் இப்படி ஒரு நிலையில் தான் நாங்கள் அவளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து பிக்பாசில் கலந்து கொள்ள வற்புறுத்தினோம் என கூறினார். இந்நிலையில் இசைவாணிக்கு திருமணம் ஆகவில்லை என பலர் எண்ணி வந்த நிலையில் இந்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here