வெள்ளித்திரைக்கு இணையாக சின்னதிரையில் வெளியாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதொடு பலத்த வரவேற்பையும் பெற்று வருகிறது. அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் அந்த வகையில் இந்த சேனலில் வெளிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் தமிழ் மக்கள் பலரும் ரசிகர்களாக உள்ளார்கள். இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியதோடு நல்ல வரவேற்பையும் பெற்றது.

காரணம் இந்த சீசனில் அதிகளவு மக்கள் மத்தியில் பரிட்சியமில்லாத பல புதுமுக பிரபலங்கள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையிலும் இதில் ஒரு சில முன்னணி விஜய் டிவி பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இதில் பதினெட்டு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி  இருக்கையில் தனது துடிப்பான பேச்சாலும் நகைச்சுவையான நடிப்பாலும் பலரது மனதை கொள்ளை கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.

இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது இந்த சீசனின் இறுதி கட்டம் வரை வந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன் தகவல்களின் படி பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் மொத்தம் 106 நாட்களை கடந்துள்ளார் இந்நிலையில் 15 வாரம் ஆன நிலையில் வாரத்திற்கு இவருக்கு சம்பளமாக இரண்டு லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் 15x 2லட்சம் = முப்பது லட்சத்தை சம்பளமாக வாங்கியுள்ளார். இருப்பினும் இதில் 30% வரியாக பிடிக்கபோக மீதமுள்ள தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here