பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை வனிதா அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இன்று வரை பல மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகை வனிதா அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்கி பல விஷயத்தில் மாட்டிக்கொண்டும் பலரின் பிரச்சனைகளிலும் சிக்கி கொண்டார்.மேலும் இவர் அண்மையில் இணையதளம் முழுவதும் இவரை பற்றிய செய்திகள் மட்டுமே வந்த வண்ணம் இருந்தது.இவர் அண்மையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.மேலும் இந்த திருமணத்தால் பல பிரச்சனைகளில் சிக்கினர் நடிகை வனிதா.

அவரது கணவரான பீட்டர் பால் அவர்களுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் உள்ள நிலையில் அவரது முன்னால் மனைவி அவர் மீது போலீசில் புகார் அளித்தும் பல முயற்சிகளை மேற்கொண்டும் வந்தார்கள்.மேலும் இந்த பிரச்சனையில் பல தமிழ் சினிமா பிரபலங்களான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்துரி மற்றும் பலர் இந்த சம்பவத்தில் தலையிட்டு வனிதா அவர்களால் பெரிதும் வருத்தெடுக்கப்பட்டார்.

பீட்டர் பால் அவர்களின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் அவர்கள தன்னிடம் முறை படி விவாகரத்து வாங்கலாமே இவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டார் என போலீசாரிடம் புகார் அளித்தார்.மேலும் இந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத நிலையில் வனிதா அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுக்கும் வகையில் பெரும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில் பீட்டர் பால் அவர்களுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.போரூரில் உள்ள தனியார் மருத்துவமனனயில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என செய்திகள் வெளியாகி உள்ளன.மேலும் அதனை அறிந்த ரசிகர்கள் கூடிய விரைவில் குணமடைய வேண்டி வருகிறார்கள். மேலும் தகவல்களுக்கு கீழே  வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here