கடந்த சில வருடங்களாக மக்களின் மாபெரும் பொழுதுபோக்கு ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்து வருவது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்து தற்போது ஐந்தாவது சீசன் பலத்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இருப்பினும் என்ன தான் சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மக்கள் மத்தியில் வெகு பிரபலம் எனலாம். அதிலும் தொடர்ந்து தனது நெகடிவான செயல்களாலேயே மக்கள் மத்தியில் வெகு பிரபலமானவர் என்றால் அது நம்ம பிக்பாஸ் ஜூலியாக இருக்க முடியும்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனது இழிவான செயல்களால் பலவிதமான எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளான ஜூலி அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தொடர்ந்து நெட்டிசன்கள் மூலம் கலாயித்து தள்ளப்பட்டார். இப்படி இருக்கையில் பல காலமாக இருந்த இடம் தெரியாமல் இருந்து வந்த ஜூலி சமீபகாலமாக விஜய் டிவியில் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு இருந்தார். இவ்வாறு இருக்கையில் அந்த நிகழ்ச்சியும் முடிந்த நிலையில் அம்மிணி என்ன செய்கிறார் என தெரியாமல் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை ஒருவர் நான்கு வருடங்களாக காதலித்து நெருக்கமாக இருந்து என்னிடம் இருந்து தங்க செயின் இருசக்கர வாகனம் மற்றும் பணம் பிரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்கி என்னை ஏமாற்றி விட்டார் என காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்து இருந்தார்.

அது கூறித்து விசாரித்த போலீசார் சென்னையில் அமைந்தகரை பகுதியை சேர்ந்த மனிஷ் வயது 26 என்பவர் அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் சலூன் கடையில் பணிபுரிந்து வருவதாகவும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் இவரும் ஜூலியும் காதலித்து வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் மனிஷ் என்பவரை போலிசார் மேற்கொண்டு விசாரிக்கவே மனிஷ் கூறியதாவது கடந்த 2017-ம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கேரளாவை பூர்விகமாக கொண்ட மனிஷ் அந்த பிரச்சனைக்கு ஆறுதல் கூறவே அதுவே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியுள்ளது. இது ஒரு புறம் இருக்க ஜூலி சமீத்தில் இவருக்கும் டாட்டா சொல்லி வேறு ஒரு நபருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாக இந்த தகவல் தெரிய வரவே மனிஷ் ஜூலிக்கு போன் செய்து தன்னை விட்டு செல்ல வேண்டாம் என்னால் நீ இல்லாமல் இருக்க முடியாது என கூறி அழுது புலம்பி வந்துள்ளார். இதனால் மனிஷிடம் இருந்து தப்பிக்க வழிதெரியாமல் போலீசில் வழக்கு தொடுத்துள்ளார் போலி ஜூலி. இதனை தொடர்ந்து மனிஷ் ஜூலி தனக்கு வாங்கி கொடுத்ததாக சொன்ன அணைத்து பொருட்களையும் தாமாகவே போலீசில் ஒப்படைத்துள்ளார். இந்த தகவல் முழுதும் விசாரித்த போலீசார் இதில் ஜூலியின் அம்பலம் தெரிய வரவே இருவருக்கும் அட்வைஸ் செய்து அனுபியுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here