சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளுமே மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதோடு இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதில் ஒன்று என்றால் கடந்த வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தற்போது ஐந்தாவது சீசனுக்கு அடியெடுத்து வைக்கபோகும் பிரபல முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மக்களிடையே தொடர்ந்து பார்க்கபடுவதோடு பலர் இந்த நிகழ்ச்சியின் வேறே லெவல் ரசிகர்களாக உள்ளார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்களும் மற்றும் புதுமுக நடிகர் நடிகைகளும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு தங்களை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொள்வதோடு வெள்ளித்திரையில் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். இந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் விஜய் டிவியை சார்ந்தவர்களும் மேலும் இணையத்தில் பிரபலமாக இருப்பவர்களும் தான் அதிகளவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்க படுகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி மக்கள் முன்னிலையில் பிரபலமாக இருக்க காரணம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள். இதன் காரணமாகவே இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பவர்கள் அதிகம் எனலாம். இந்நிலையில் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்க போவது கமல் இல்லை எனவும் அவர் இனிவரமாட்டார் என்பது போலும் பலதகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இப்படி இருக்கையில் இதை பொய்யாகும் வகையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும்  என்டிமோல் நிறுவனம் கமல்ஹாசன் அவர்கள் தான் தொடர்ந்து தொகுத்து வழங்குவார் என்பது போலன தகவல்களை வெளியிட்டது.

இன்னிலையில் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யாரென தெரியாமல் மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக டிக்டாக் புகழ் ஜிபி முத்து கலந்து கொள்ளபோவதாக பல தகவல்கள் ஊர்ஜிதமாக வந்த வண்ணம் உள்ளது. டிக்டாக் மூலம் பிரபலமாகி தொடர்ந்து நெகடிவ் கமெண்டுகளை மட்டும் வாங்கி வந்த ஜிபி முத்து தற்போது யூடுப் சேனல் ஒன்றை நிறுவி அதில் தனக்கு வரும் கடிதங்களை படித்து மக்களை மகிழ்வித்து வருவதோடு ம்,மக்கள் மத்தியில் வேற லெவலில் பெமஷாக உள்ளார். மேலும் தற்சமயம் பல படங்களில் நடித்தும் வருகிறார் தலைவர் ஜிபி முத்து.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here