கடந்த சில தினங்களாக மக்கள்  மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும் அந்த வகையில் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றதோடு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பல புதுமுக மற்றும் பிரபலமான பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இருப்பினும் இந்த சீசனில் அதிகளவில் பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டதோடு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டனர். அதேபோல் மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் போட்டி பொறாமை , அழுகை, காமெடி, கோபம் அதையும் அதையும் தாண்டி முக்கியமாக காதல் இது அனைத்தும் இந்த சீசனிலும் இருந்தது.

அதிலும் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் இவையனைத்தும் ஓரளவு அதிகமாக இருந்தது. இப்படி இருக்கையில் இந்த சீசனில் காதல் முக்கோண காதல் எனும் வகையில் ஆரம்பித்து அது இறுதியில் இவர்களுக்கு இடையில் போய் முடிந்தது. அந்த வகையில் இந்த சீசனின் துவக்கத்திலேயே போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பிரபல சின்னத்திரை நடிகை பவனி இவர் விஜய் டிவியில் வெளிவந்து பிரபலமான சின்னதம்பி சீரியலில் கதையின் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதன் மூலம் பிரபலமான பவனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். இவரை இந்த நிகழ்ச்சியில் முதலில் பார்த்த அனைவரும் இவருக்கு வயது என்ன 23 இருக்கும் எனவும் மேலும் இன்னும் இவருக்கு திருமணம் ஆகவில்லை எண்ணி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வந்த கதை சொல்லும் டாஸ்க்கில் தனக்கு திருமணம் ஆனது குறித்தும் கணவர் காலமானதும் பின்னர் தனக்கு 33 வயதுக்கு மேல் ஆகிறது எனவும் தனது கதையை கூறியிருந்தார்.

இதை அறிந்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட அபிநயுக்கும் இவருக்கும் காதல் என போட்டியாளர்கள் பலர் பேசி வந்தனர். இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக வைல்ட் கார்ட் என்ரியாக உள்ளே வந்தவர் டான்ஸ் மாஸ்டர் அமீர். இவர் வந்த நாள் முதலே பவனியுடன் நெருங்கி பழகியதோடு அதிகளவில் அவர் உடனே நேரத்தை செலவழித்து வந்தார். இந்நிலையில் அமீர் தனது காதலை வெளிப்படையாக பவானியிடம் கூற அதற்கு அவரும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் சிரித்தபடி சென்று விட்டார். இது ஒரு பக்கம் இருக்க பவனியை விட அமீர் வயதில் மிகவும் சிறியவர் என்ற நிலையில் இது எல்லாம் சரியா என பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இருப்பினும் இதை பற்றி வெளியில் இருந்து வந்தவர்கள் பலர் கூறியும் அதைபற்றி சற்றும் பொருட்படுத்தாத அமீர் மீண்டும் காதல் சேட்டைகளில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில் பவனி மற்றும் அமீர் மூன்றாவது நான்காவது இடத்தை பிடித்தனர். இவ்வாறு இருக்கையில் வெளியில் வந்த இருவரும் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என அமீர் தரப்பினர் கூறியுள்ளனர். இதன் படி இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here