சமீபத்தில் சின்னத்திரையில் பரபரப்பாக பேசபடுவதோடு பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் யார் டைட்டில்லை வேல்லபோகிரார்கள் என பார்ப்பதற்கு மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் எனலாம். அந்த வகையில் இந்த சீசன் பதினெட்டு போட்டியாளர்களை துவங்கிய நிலையில் நிகழ்ச்சியின் ஐம்பவதாவது நாளில் வைல்ட் கார்ட் என்ரியாக இருவர் உள்ளே வந்த நிலையில் இந்த சீசனில் இருபது பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தற்போது இறுதி வாரத்தில் ஐந்து போட்டியாளர்கள் இறுதி நாளை நோக்கி யாருக்கு ஐம்பது லட்சம் எனும் நோக்கில் போட்டி போட்டு வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இப்போது பவனி, ராஜு, பிரியங்கா, அமீர் மற்றும் நிரூப் ஆகியோர் உள்ளார்கள் இவ்வாறு இருக்கையில் இந்த வாரம் யாருக்கு அடிக்கபோகிறது ஜாக்பாட் என தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே தனது நகைச்சுவையான மற்றும் சிறப்பான விளையாட்டால் பலரது மனதில் இடம்பிடித்த ராஜு முதல் இடத்தை

பிடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் அவர் தான் இந்த சீசன் வெற்றியாளர் என்ற பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிடிக்கபோவது பிரியங்கா தான் என்ற தகவலும் வந்த நிலையில் அதில் சில மாற்றங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பிரியங்கா இரண்டாவது இடத்தை பெறப்போவது இல்லை எனவும் அந்த இடத்தை பிடிக்கபோவது பவனிதான் எனவும் பலர் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

காரணம் பிரியங்காவை காட்டிலும் பவனிக்கு அதிகளவில் ஓட்டுகள் விழுந்த வண்ணம் இருப்பதால் தான் இந்த முடிவு என கூறுகிறார்கள் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியாத நிலையில் பலரும் தங்களுக்கு விருப்பமான கருத்துகளை கூறி வருகின்றனர். எது எப்படியோ இன்னும் ஒரு சில நாட்களில் யார் எந்த இடத்தை பிடிக்கபோகிறார்கள் என தெரிந்து விடும். உலகநாயகன் கமல் ஹாசன் சொல்வதுபோல் எதிர்பாரததை எதிர்பார்க்கலாம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here