தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரையில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதில் கலந்துகொள்ளும் பிரபலங்களும் தான் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். இந்நிலையில் தமிழ் மக்களின் பலரின் கடந்த சில மாதங்களாக பெரிதளவில் பொழுதுபோக்காக பார்க்கபட்டு வந்த ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் அல்டிமேட். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் ஐந்து முடிந்தகையோடு இணையத்தில் 24-மணிநேரமும் ஒளிபரப்பாகும் வகையில்
இருந்தது. இப்படி இருக்கையில் இந்த சீசனில் இதற்கு முன் ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களே மீண்டும் கலந்து கொண்ட நிலையில் இந்த சீசன் துவங்கிய முதல் வாரத்தில் இருந்தே விறுவிறுப்புக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லை எனலாம். காரணம் அந்தளவிற்கு இந்த சீசனில் பல மாறுதல்களும் குழப்பங்களும் தொடர்ந்து அரங்கேறி வந்ததை அடுத்து இந்த சீசனை தொகுத்து வழங்கி வந்த உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களும் விலகிய நிலையில் பிரபல முன்னணி நடிகர் சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் அல்டிமேட்டின் பினாலே வந்ததை அடுத்து அதில் இறுதி கட்ட போட்டியாளர்களாக பாலா, நிரூப், ரம்யா, தாமரை
ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த நிலையில் முப்பத்தைந்து லட்சம் பரிசுதொகையையும் டைட்டில் வின்னர் பட்டதையும் பாலா தட்டி சென்றார் . இந்நிலையில் இந்த சீசன் முடிந்ததை அடுத்து ரசிகர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் புலம்பி வந்த நிலையில் அவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் முடிந்த மறுகணமே பிக்பாஸ் சீசன் 6வரும் ஜூன் மாத இறுதி வாரத்தில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது இதையடுத்து இதில் எந்த பிரபலங்கள் எல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என மக்கள்
ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இந்த சீசனை யார் தொகுத்து வழங்க போகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பெரிதளவில் கேட்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் பிக்பாஸ் சீசன் 6 -யை மீண்டும் உலகநாயகன் கமல் ஹாசன் அவர்களே தொகுத்து வழங்க போவதாக தெரிய வருகிறது. இருப்பினும் சிம்பு தொகுத்து வழங்கியது மக்கள் இடையில் பெரிதளவில் விரும்ப்பட்ட நிலையில் அவரே மீண்டும் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் வைரளாகி வருகிறது.