பிரபல இசை தொலைக்காட்சியான சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவில் நுழைந்தவர் காஜல் பசுபதி. காஜல் பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.இவர் முதன் முதலில் திரையுலகில் அறிமுகமானது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை அடைந்த திரைப்படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் திரைபடத்தில் தான். இதனை தொடர்ந்து பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவர்.

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகைகளின் லிஸ்ட்டில் முதல் பெயராக காஜல் அவர்களின் பெயர் இருக்கும் அந்த அளவிற்கு நெகட்டிவ் கதாபாத்திரங்களில் தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார்.  இவர் தமிழில் டிஷ்யும், சிங்கம், கோ 2, மௌனகுரு, கௌரவம், இரும்புக்குதிரை, கலகலப்பு 2 போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவ்வாறான நிலையில் இவர் திரையுலகை சேர்ந்த நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை வெளிவட்டாரதுக்கு தெரிவதற்குள்ளே முடிந்து விட்டது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் சாண்டி இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையிலும் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஒரு நல்ல தோழியாக உள்ளார் காஜல். இது கூறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய காஜல், நாங்கள் இருவரும் காதலித்து முறைபடி திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணத்தை இருவீட்டாரும் ஏற்காத நிலையில் இருவரும் அவர்களிடம் மறைத்து தனியாக வாழ்ந்து வந்தோம்.

இப்படி இருக்கையில் இதை பலர் தவறாக பேசிய நிலையாலும் பல கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் நாங்கள் பிரிந்து விட்டோம்.சாண்டி என்னை பிரிந்ததற்கு நான் தான் முழுக்க காரணம் அவர் மீது கொண்ட அதிகபடியான பாசத்தினால் அவரை நான் நிறைய கஷ்டபடுத்தி இருக்கிறேன். இருப்பினும் தற்போது சாண்டி மற்றும் அவரது மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறேன் என கூறியிருந்தார்.

மேலும் கடந்த வருடம் நடந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே மேலும் பிரபலமான காஜல் தன் உடல் எடையை குறைத்து போடோசூட் நடத்தி அதன் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வைராளாகி வருகிறார். அந்த புகைப்படத்தில் படு ஸ்லிம்மாக ஆளே அடையாளம் தெரியாதது மாறியிருக்கும் காஜலை பார்த்து அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.இதோ அந்த புகைப்படங்கள் கீழே..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here