பிக்பிரதர் என்று அழைக்கப்பட்டு இன்றும் பிக்பாஸ் என்ற பெயரில் இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றி பெறுமோ என்ற தயக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் முதல் சீசன் யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் விரும்பி பார்த்தனர். இப்படி முதல் சீசனில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த பிக்பாஸ் குழு தென்னிந்திய மொழிகளிலும் இந்த நிகழ்சியை ஒலிபரப்பு செய்ய முடிவெடுத்தது. இப்படி தமிழ், தெலுங்கு , மலயாளம், என பல மொழிகளிலும் முதல் சீசன் தொடங்கப்பட்டது.
தமிழில் இந்த நிகழ்ச்சியை பற்றி பெரிதும் மக்களுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் மக்கள் போக போக விரும்பி பார்க்க ஆரம்பித்தனர். இப்படி பல பிரபலங்களும் கலந்து கொண்டு முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததும் வருடா வருடம் அடுத்தடுத்த சீச்சங்கள் வெளிவந்தது. ஆனாலும் இன்றும் பலரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள பயந்து தான் போகிறார்கள் .
ஆனாலும் பல பிரபலங்களும் இன்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரப்லாமடைந்துதான் வருகிறார்கள் . இப்படி கடந்த வாரத்திலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர்களும் , சினிமா நடிகர்களும், மாடல் நடிகர்களும் நடிகைகளும் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்படி சினிமா நடிகரான ஆரி இவரும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார். இபப்டி ன்றைய பிக்பாஸ் டாஸ்க்கில் மறைந்த அவரது அம்மாவை பற்றி பேசியது பலருக்கும் உருக்கமான ஒன்றாக இருந்தது இவரது வாழ்க்கையில் இவரது அம்மா எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதி இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்தது இதோ இவரது அம்மாவின் புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.