தென்னிந்திய வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் தான்  மக்கள் மனதில் அதிகளவு இடம்பிடிப்பது மட்டுமின்றி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது நான்கு சீசனை தொடர்ந்து ஐந்தாவது சீசனில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெருமளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த அளவு பிரபலமான பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா  சம்பத்குமாரை எல்லாருக்கும் நன்றாக தெரிந்திருக்கும் அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பல விமர்சனங்களும் வந்தன.

இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை விமர்சனங்கள்  செய்வதோடு இல்லாமல் அவரை சார்ந்தோரையும்  விட்டு வைப்பதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே தயங்கிய நிலையிலும் அதில் கலந்து கொண்டாலும் வெளியில் வந்து எந்தவொரு பேட்டிகளிலும் பங்கேற்பதில்லை. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்களை காட்டிலும் பெண் போட்டியாளர்கள் தான் அதிகம் விமர்சங்களுக்கு ஆளானார்கள். அந்த வகையில் அர்ச்சனா, நிஷா, சம்யுக்தா போன்ற பெண் போட்டியாளர்கள் சமூக வலைதளங்களில் பெருமளவில் விமர்சிக்கப்பட்டு வந்தனர். இவர்களது வரிசையில் அனிதா சம்பத்தை ஒரு படி மேலே சென்று அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் தனக்கு தொடர்ந்து  மெசேஜ்களை செய்து வருவதாகவும் மேலும் அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் தொடரை முடித்து வெளியே வந்ததும் அவரது தந்தை காலமானார். இதன் மூலம் மிகுந்த வருத்தத்தில் இருந்த நிலையில் அனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்க்குள் வந்திருந்த பொழுது ஒரே சமயத்தில் தனது அப்பாவின் மறைவு மற்றும் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளமுடியவில்லை என்று ஆரியிடம் புலம்பியிருந்தார். இதனை தொடர்ந்து எந்த ஒரு பேட்டிகளிலும் கலந்து கொள்ளாத அனிதா இணையத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் அவரது இணைய பக்கத்தில் அனிதா வை தொடர்ந்து ஒரு நபர் விமர்சனம் செய்து வருவதாகவும் அந்த இளைனரின் புகைப்படத்தை வெளியிட்டதோடு,  இவனை சந்தித்தால் கவனமாக இருங்கள் வருங்கால் என பதிவிட்டுள்ளார் .நீ டைப் செய்ததை உன் அம்மாவிடம் காட்டு அவர் மிகவும் சந்தோசபடுவார் என்று கூறியுள்ளார். இதே மாதிரியே போன வாரம் ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். வாரம் ஒரு முறை இதனை பற்றி தனது சமூக வலைத்தளங்களில் கூறி வரும் அனிதா சம்பத்திற்கு எப்பொழுதுதான் விடிவுகாலம் வருமோ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here