பிக்பாஸ் சீசன் 3 விஜய் டிவி தொலைகட்சியினால் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது .கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் இன் நிகழ்ச்சி இரண்டு சீசன் வெற்றிகரமாக முடிந்து மூன்றாவது சீசன் நடந்து வருகிறது .இந்த சீசன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இதில் பங்கு பெற்ற போட்டியளர்கள் அனைவரும் நன்றாக விளையாடி வருகின்றனர். .

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. 100 நாட்களுக்கு தொடர்ந்து ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது.

இந்த மூன்றாவது சீசன் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பிக்பாஸ் போட்டியளர்கள் அவர்கள் குடும்பத்தாரை சந்திக்கும் வாய்ப்பை வழங்கி வருகிறது .இதில் போட்டியாளராக உள்ள கவினின் நண்பர் பிக்பாஸ் வீட்டுற்குள் வந்தார் .அவர் கவினை பளார் என்று அறைந்த அவரது நண்பர். ஃப்ரீஸ் டாஸ்கிற்காக உள்ளே வந்த அவர் அப்படி நடந்து கொண்டது மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளது .

கவின் நண்பர் உள்ளே வந்து நீ இவ்ளோ கேவலமா விளையாடுவது கேம் இல்லை.நீ மட்டமா நடந்துக்கிட்டதுக்கும் ,உன்ன நம்பின ஒருத்தர நீ கை விட்டத்துக்காகவும் இப்போ ஒன்னு பண்ண போறேன்னு சொல்லிட்டு இத நீ பிக்பாஸ் டைட்டில் வின் பண்ணினதுக்கு அப்புறம் எனக்கு திருப்பி குடுன்னு பளார் என்று என்று அறைந்து விட்டார் .

இந்த சம்பவத்தை பார்த்த அனைவருக்கும் ஒரு நிமிடம் என்னவென்று புரிய வில்லை.பிக்பாஸ்  ஒரு நிமிடம் இதனை பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்பு வெளியே வந்த கவின் நண்பர் நான் ஏன் அவனை அடித்தேன் என்று கூறியுள்ளார் .

இதற்கு என்ன காரணம் என்று அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், இதில் ‘கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது.ஆனால், அவர் மிகவும் நல்லவர், எனக்கும் அம்மா மாதிரி தான், இவன் செய்யும் சில வேலையால், அவனுடைய அம்மாவையும் சேர்த்து திட்டுகிறார்கள்.

இதனால் மனம் உடைந்த கவின் நண்பர் உள்ளே சென்று அடித்து உள்ளார்.கவினை அடித்த வீடியோ கீழே உள்ளது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here