தற்போது சின்னத்திரை ரசிகர்களால் விரும்பப்பட்டு பார்க்கப்பட்டு வரும் நிகழ்சிகளில் ஒன்றாக இருப்பது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் ஆர்வத்துடன் பார்த்து வரும் ரியாலிட்டி ஷோவாக பல ஆண்டுகள் சின்னத்திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இப்படி மேலை நாடுகளில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி பின்னர் இந்தியாவிலும் ஹிந்தி மொழியில் முதன் முதலில் பல பாலிவூட் ப்ரப்பலங்களையும் வைத்து தொடங்கப்பட்டது.

இப்படி அங்கு யாரும் எதிர்பாராத வகையில் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்றுள்ளது. இப்படி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழிலும் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே பலரும் காத்திருந்தனர். தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சி மீது பெரிய புரிதல் இல்லாமல் இருந்தாலும் போக போக விரும்பி பார்த்து ரசித்தனர். இப்படி பல்வேறு வெள்ளித்திரை, சின்னத்திரை, மாடல் நடிகர்கள் பிரபலங்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

இப்படி முதல் சீசன் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்டு தற்போது நான்காவது சீசன் முடிந்துள்ளது. இந்த முறை கொரோனா காரணமாக தள்ளிபோடபட்ட நிகழ்ச்சியானது மீண்டும் தொடங்கப்பட்டு சுவாரசியமாக சென்று இறுதி வாரத்தை எட்டி தற்போது நடிகர் ஆரி முதளிடைத்தை பிடித்து பரிசு தொகையினையும் கோப்பையினையும் வென்றார்.

இப்படி சின்னத்திரை நிகல்சிகளிலேயே அதிக பணபுழக்கம் உள்ள நிகழ்ச்சியாக திகந்து வரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்து பலருக்கும் தெரியாது, இந்நிலையில் இந்த முறை போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பள ம்குரித்து தகவல்கள் வெளியாகியுள்ளது இதன்படி நடிகை  ரேகா: ரூ.1 லட்சம் x 14( நாட்கள்) = 14 லட்சம், நடிகை சனம்ஷெட்டி: ரூ.1 லட்சம் x 63 ( நாட்கள்) = 63 லட்சம், நடிகர் ஆரி: ரூ.85,000 x 105 ( நாட்கள்)+ 50 லட்சம் = 1 கோடியே 35 லட்சம் 25 ஆயிரம், பாடகி சுசித்ரா: ரூ.80,000 x 17 ( நாட்கள்) = 13.60 லட்சம், தொகுப்பாளினி அர்ச்சனா: ரூ.75,000 x 67 ( நாட்கள்) = 50.25 லட்சம், நடிகை
ரம்யா பாண்டியன்: ரூ.75,000 x 105 ( நாட்கள்) = 78.75 லட்சம்,
நடிகை கேப்ரில்லா: ரூ.70,000 x 102( நாட்கள்) + 5 லட்சம் = 76.40 லட்சம்,

நடிகை ஷிவானி: ரூ.60,000 x 98( நாட்கள்)= 58.80 லட்சம், நடிகர் ரமேஷ்: ரூ.60,000 x 69( நாட்கள்) = 41.40 லட்சம், பாடகர் வேல்முருகன்: ரூ.50,000 x 28( நாட்கள்) = 14 லட்சம், நடிகை நிஷா: ரூ.40,000 x 70 ( நாட்கள்) = 28 லட்சம்,மாடல் அழகி சம்யுக்தா: ரூ.40,000 x 56 ( நாட்கள்) =22.40 லட்சம், செய்தியாளர் அனிதா சம்பத்: ரூ.40,000 x 84 ( நாட்கள் ) = 33.60 லட்சம், நடிகர் ரியோ: ரூ.35,000 x 105( நாட்கள்) = 36.75 லட்சம், பாடகர் ஆஜித்: ரூ.15,000 x 91 ( நாட்கள் ) =13.65 லட்சம், சுரேஷ்: ரூ.10,000 x 35 ( நாட்கள் ) =3.50 லட்சம், சோம்: ரூ.10,000 x 105 ( நாட்கள் ) = 10.50 லட்சம்
மாடல் நடிகர் பாலா: ரூ.10,000 x 105 ( நாட்கள் ) = 10.50 லட்சம். மேலும் இது பற்றிய புகைப்படம் கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here