சமிபத்தில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் பல திரை பிரபலங்கள் போட்டியாளர்கலாக கலந்து கொண்டனர். இதில் சின்னத்திரை பிரபலங்கள் மட்டுமின்றி வெள்ளித்திரை,பாடகர், விளம்பர நடிகர் என பலரும் கலந்துகொண்டனர். இதில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவரும் விஜய் தொலைகாட்சியில் இருந்தும் பலர் கலந்துகொண்டனர். அதிலும் ரியோ ,ஆஜித் போன்ற பல பிரபலங்களையும் அத்தொலைக்காட்சி அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல பெரிய அளவில் உதவியதாக பல தகவல்கள் சமுக வலைதளங்களில் பரவிவந்தது.
இந்நிலையில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்துள்ளனர்.இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலமான ரியோ, ஆஜித் போன்றோரை இறுதிவரை கொண்டு செல்ல பல விஜய் டிவி பிரபலங்களும் அவர்களுக்கு வாக்களித்துவன்தனர். அதிலும் ரியோவிற்கு வாக்களித்து அந்த புகைப்படத்தை பலரும் தனது சமுக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதில் இப்போட்டியில் இறுதி நாளன்று போட்டியாளர்களுக்கு கமல் பரிசு வழங்குவது வழக்கம். அதுபோல் அவர் போட்டியாளர்களான ஆரிக்கு பேனா மற்றும் டைரி ஒன்றையும் அளித்திருந்தார் . அதேபோல் பாலாஜிக்கு உடற் பயிற்சி செய்யும் பரிசு ஒன்றை அளித்தார் அதேபோல் ரியோவிற்கு டென்டையும், சோம் சேகருக்கு தாளத்தையும் ரம்யாவிற்கு இயற்க்கை விதைகளையும் அளித்தார்.
ரியோ ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வீட்டிற்கு வந்ததும் நன்றாக சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கியபின் தனது வண்டியை எடுத்துக்கொண்டு காட்டிற்கு ட்ரக்கிங் செல்வதாக கூறியிருந்தார். அதனால்தான் கமல் அவருக்கு டென்ட் பரிசாக வழங்கினார். அதேபோல் அவர் தற்போது ட்ரக்கிங் சென்றுள்ளார். அதனை அவர் தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டு “TO ANOTHER WORLD” என குறிப்பிட்டிருந்தார்.
To another world 🤪 pic.twitter.com/3n959bBvuU
— Rio raj (@rio_raj) January 28, 2021