கிட்டத்தட்ட சின்னத்திரை ரசிகர்களில் பலராலும் கொடடப்பட்டு வரும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். மேலை நாடுகளில் உள்ள கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது பின்னர் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தபட்டது. இப்படி இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பற்றி பெரிதாக புரிதல் இல்லாமல் இருந்தாலும் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. முதல் சீசன் மக்களுக்கு பிடித்துப்போவே யாரும் எதிர்பாராத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்த்தது, இதனை தொடர்ந்து அடுத்தடுத்தசீசன்களும் வெளிவந்து தற்போது பதினான்காவது சீசன் வரை சென்றுள்ளது.
இப்படி அங்கு வெற்றியடைந்ததை முன்னிட்டு தென்னிந்திய மொழிகளில் ஓளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழிலும் ஒளிபரப்பபட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குகிறார் என்றதுமே இந்த நிகழ்ச்சி பற்றியும் அவரை பற்றியும் பல விமர்சனங்கள் வந்திருந்தாலும் இந்த நிழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது, இப்படி மற்ற மொழிகளை போலவே சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும், மாடல் நடிகர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்படியிருக்க யாரும் எதிர்பார்த்த வகையில் முதல் சீசன் மக்களிடையே அல்ல வரவீர்ப்பு பெற்று மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல ஆண்டுகள் தள்ளிபோடபட்டலும் கொண்டாட்டத்துடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இப்படி இந்த முறையும் பல முன்னணி பிரபலங்களும் கலந்து கொண்டு வாராவாரம் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது,
இந்நிலையில் இருதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது மக்கள் மனதில் டாப்பில் இருப்பது என்னவோ ஆரி தான், ஆனால் கடந்த ஒரு வரமாகவே ஆரியை தவறாக காண்பிக்கும் என்னைத்தில் நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர் அது மட்டுமில்லாமல் இன்னும் ஒரு சில நாளில் இறுதிப்போட்டி வரும் நிலையில் பலரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர், இந்நிலையில் ஆரிக்கு கால் செய்து வாக்களிக்கும் பரசிகர்களுக்கு ஏமாற்றமாக அந்த கால் போகவில்லை என இணையத்தில் பல புகார்களை கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பல பிரபலங்களோ இது பாலாஜியை ஜெயிக்க வைப்பதற்காக தொலைக்காட்சி செய்யும் சதி என கூறி வருகின்றனர்.