வெள்ளத்திரையில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சின்னத்திரையில் நடித்து பிரபலமாவர்கள் எண்ணிக்கை அதிகம். அப்படி திரைப்படங்களில் என்னதான் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி தற்போது நான்காவது சீசனை வெற்றிகரமாக முடித்து ஐந்தாவது சீசனில் கால் வைக்கும் தொடர் தான் பிக்பாஸ் . இதில்போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலர் திரைப்படங்களில் மற்றும் சின்னத்திரையில் நடித்திருந்தாலும் சில நபர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் வந்த சோம் சேகர்,பாலாஜி முருகதாஸ்,ஆஜித்,சம்யுக்தா போன்றவர்கள் வெள்ளித்துறையில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகதவர்களே இருந்தனர்.

இவர்கள் வரிசையில் 56-வயதான சுரேஷ் சக்கரவர்த்தியும் ஒருவர்.1989-ல் மலையாளத்தில் வெளியான பிரேமா படத்தில் மறைந்த எஸ் .பி.பாலசுப்பரமணியுடன் இணைந்து தனது 19 வயதிலேயே திரைத்துறையில் நடித்துள்ளார். அதன்பின் தமிழில் மம்மூட்டியுடன் அழகன் படத்தில்அதிராம்பட்டி சொக்கு கதாபாத்திரத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் விசு மற்றும் எஸ்.பி.பி மற்றும் பல முன்னனி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குறியவர்.

அப்போதைய காலகட்டத்தில் பிரபல நிகழ்ச்சியான பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை இயக்கியுள்ளார். தமிழ் ,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகாத சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நல்ல வரவேற்றையும் தன்னை அடையாளமும் காட்டிக்கொண்டார். இதன்மூலம் அங்காடி தெரு,அரவான்,காவியத்தலைவன் போன்ற படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற வசந்த பாலன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் சினிமா வட்டாரத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கைதி மற்றும் மாஸ்டர் பட புகழ் ஆர்ஜுன் தாஸை கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை எடுக்கப்போவதாக கூறியுள்ளார். அதன் படபூஜை சமீபத்தில் நடைபெற்றது.இப்படி இருக்கையில் இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் தான் கலந்து கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.இனிமேல் சுரேஷ் சக்கரவர்த்தியை திரைப்படங்களில் நாரதராக பார்க்கலாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here