பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பதினாறு போட்டியாளர்களை கொண்டு நடத்தப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளர்களில் ஒருவாராக கலந்து கொண்டவர் ரைசா வில்சன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே அறிமுகமான ரைசா நல்ல வரவேற்பையும் தனக்கென தனி ரசிகர் பட்டளாத்தையும் ஏற்படுத்திக்கொண்டார். 30-வயதான ரைசா கல்லூரி படிப்பை முடித்து மாடலிங்கில் கலக்கி வந்தார்.

மேலும் ரைசா 2010 மற்றும் 2011 ம் ஆண்டு நடந்த அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை வென்றுள்ளார். இதன் மூலம் திரையுலகில் நுழைந்த ரைசா தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி 2 எனும் வெற்றி திரைபடத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து பிக்பாசில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார் ரைசா. இதனால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தன்னுடன் போட்டியாளராக இருந்த ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியாரே பிரேம காதல் எனும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இதை தொடர்ந்து எப்.ஐ.ஆர், அலிஸ், தி சேஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவ்வபோது தனது மாடர்னான  புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கம். இந்த வகையில் சமீபத்தில் மாலத் தீவு சென்றிருந்த ரைசா அங்கு போட்டோசூட் நடத்தி தனது மாடர்னான புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைபடத்தில் ரைசா ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி வைராளாகி வருகிறது.

ரைசாவுடன் இருப்பது யார் அவரது காதலரா மேலும் அந்த படத்தில் இருப்பது ரைசா என தெரியாமால் அவரது ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் அவருடன் நெருக்கமாக இருப்பது அவரது காதலர் தான் ஒரு ரசிகர் வட்டாரம் விமரசனங்களை பரப்பிவருகிறது. இந்நிலையில் ரைசா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here