தமிழ் சிஹின்னத்திரை மட்டுமல்லாத்து பொதுவாகவே இந்திய சின்னத்திரையில் தற்போது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வரும் சின்னத்திரை நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். மற்ற நிகழ்சிகளை காட்டிலும் வித்யாசமாக ரியாலிட்டி ஷோவாக இருப்பதால் தனக்கு பிடித்த பிரபலங்களும் நடிகர்களும் நிஜ வாழ்வில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருப்பதால் இதனை பார்த்து வருகின்றனர். இப்படி முதன் முதலில் இந்தியாவில் ஹிந்தி மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி அங்கு மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படி அதனை தொடர்ந்து பல வருடங்கள் ஒளிபரப்பப்பட்டு தற்போது பதி நான்காவது சீசன் வரை சென்று கொண்டு இருக்க தமிழிலும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்டது. இப்படி இந்த நிகழ்ச்சி பற்றி பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய புரிதல் இல்லாமல் இருந்தாலும் கூட உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே பல திசைகளில் இருந்தும் பல எதிர்ப்புகள் வர தொடங்கியது. இருந்தும் கூட போக போக இந்த நிகழ்ச்சிரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோகவே போக போக ஆரவத்துடன் பார்த்து வெற்றி பெற செய்தனர்.

இப்படி இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிபோடபட்ட நிகழ்ச்சி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பதினான்கு போட்டியாளர்கள் வந்த நிலையில் தற்போது ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது இது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது.

இதே சமயத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் கமல்ஹாசன் பிரச்சாரத்திற்காக தமிழகம் முழுவதும் சென்று கொண்டு இருக்கிறார். இப்படி பல இடங்களிலும் பிரச்சாரத்திற்கு சென்றுள்ள நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனிடம் பலரும் பிக்பாஸ் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் இந்த முறை அவர் பிரச்சாரத்திற்கு சென்ற பொது மக்களில் இருந்து பலர் ஆரி ஆரி என பலரும் கத்தியுள்ளனர். இதனை பார்த்த நடிகர் கமல்ஹாசன் தனது பேச்சை நிறுத்தி விட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்து மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here