இந்திய சின்னத்திரையே இந்த நிகழ்ச்சி வந்த பிறகு புதிய உயரத்தையே அடைந்தது சென்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட மேலை நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி படிப்படியாக இந்திய சின்னத்திரையிலும் ஒளிபரப்பப்பட்டு முதன் முதலில் ஹிந்தி  மொழியில் பல பாலிவூட் பிரபலங்களையும் வைத்து ஆரம்பிக்கப்பட்டது. யாரும் எதிர் பாரத வகையில் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது பதி நான்காவது சீசன் வரை வந்துள்ளது,

இப்படி படிப்படியாக தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு தமிழிலும் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை பற்றி தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு பெரிய புரிதல் இல்லாமல் இருந்தாலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் ஆரவத்துடன் பார்த்து வந்தனர். இப்படி பல சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் மீறி முதல் சீசன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து இந்தும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசங்கள் வெளிவந்தன.

இப்படி இந்த ஆண்டு கோரோநாவல் இந்த நிகழ்ச்சி தள்ளிப்போனாலும் மீண்டும் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டது. இப்படி இந்த சீசனில் பல இளம் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இப்படி இவர்களில் ஒரு பிரபலமாக பல இளசுகளும் பிடித்த போட்டியாளராக மக்களிடையே பாராட்டப்பட்டவர் பாலாஜி முருகதாஸ். கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாளிலிருந்தே தனது ஸ்டைலில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் தனக்கு தோன்றியதை செய்த இவர் ஆரியுடன் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டார்.

என்னதான் அறியும் இவரும் அடிக்கடி விமர்சனங்கள் செய்துகொண்டாலும் aari முதலிடத்தையும் இவர் இரண்டாம் இடத்தையும் பிடித்தார். கிட்டத்தட்ட ஆறு கோடி வாக்குகளை பெற்ற பாலாஜி முருகதாஸ் வெளியில் வந்து ரசிகர்களுக்கு தனது வெறியை சமர்பிக்கிறேன் என கூறினார். இப்படி இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ளேயே தனது பெற்றோர்களை பற்றி அடிக்கடி பேசிய கொண்டிருந்தது பல ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்த நிலையில் பாலாஜி முருகதாஸின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். இந்த செய்த்தியினை அவரது அண்ணன்  செய்து அவரது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளார். பல ரசிகர்களும் இந்த செய்தியினை அறிந்து பாலாஜிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here