சின்னத்திரையில் எத்தனையோ தொடர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் போதிலும் அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருகத்தான் செய்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வெற்றிகரமாக நான்கு சீசனை முடித்து ஐந்தாவது சீசனில் அடியெடுத்து வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் முதன்மையான இடத்தை பிடித்து உள்ளது. 100-நாட்கள் 16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் என இந்த நிகழ்ச்சியின் கதையம்சம் மக்களிடையே என்ன நடக்கும் என ஆர்வத்தை தூண்டவே மக்களை இந்த நிகழ்ச்சி பெரிதளவில் பார்க்க தூண்டியது.

மேலும்  இதை தொகுத்து வழங்குபவர்  உலகநாயகன் கமலஹாசன்.இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை காதல், சண்டை, கவர்ச்சி, காமெடி என அனனத்து வகையான தொகுப்புகளையும் உள்ளடக்கியதே பிக்பாஸ் நிகழ்ச்சி.இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர்களாக ஆரவ் , ரித்விகா, முகேன், ஆரி  என பலர் மக்களிடையே பிரபலமானதோடு தற்போது வெள்ளித்திரையில் வலம் வந்த வண்ணம் உள்ளனர். காரணம் இந்த நிகழ்ச்சியின் மூலம் பரிட்சயம் இல்லாத ஆட்கள் கூட மக்கள் மத்தியில் பேமசவதோடு இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளனர்.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு பலர் எங்கும் நிலையில் தற்போது நான்காவது சீசன் முடித்து ஐந்தாவது சீசனின் போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதனால் பல முக்கிய பிரபலங்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.இப்படி இருக்கையில் முக்கிய போட்டியாளர்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வரும் தர்ஷா குப்தா, பவித்ரா,அஸ்வின், புகழ், சிவாங்கி, பாலா  ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதே போல் எந்த நிகழ்ச்சியானாலும் கவர்ச்சி  தேவைப்படும் நிலையில் அதற்காக ராய் லட்சுமி, ஸ்ரீ ரெட்டி, பூனம் பஜ்வா,கிரண் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.மேலும் மூத்த போட்டியாளர்களாக லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ராதா ரவி போன்றோரிடமும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளியாக நிலையில் நிச்சயம் இவர்களாகத்தான் இருக்ககூடும் என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here