பிரபல தமிழ் தொலைக்காட்சிக்காட்சியில் ஒளிப்பரப்பாகி தற்போது நான்கு சீசன்களை கடந்து ஐந்தாவது சீசனில் காலடி வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஆர்மி அமைத்து சண்டை போடும் அளவிற்கு உள்ளது அந்த நிகழ்ச்சியின் வரவேற்பு.இந்த நிலையில் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக்பாஸ் 4-ல் போட்டியாளராக கலந்து பாதியிலே வெளியேறினாலும் மக்களிடையை நன்மதிப்பைப் பெற்றவர் சனம் ஷெட்டி.இவர் மாடலாகவும் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்.35-வயதான சனம் ஷெட்டி 2016-ல் மிஸ் தென்னிந்தியா பட்டத்தை வென்றவர்.

இவர் தமிழ்,கன்னடம்,மலையாளப் படங்களில் முதன்மையான நாயகியாக நடித்து வருகிறார்.திரைபடங்களில் நுழைவதற்கு முன் டாடா கன்சல்டன்சியில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றியுள்ளார்.இவர் இங்கிலாந்தில் இருந்த இலங்கை ஆவணப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.இதன் காரணமாக பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளரான தர்சனுக்கும் சனம் ஷெட்டிக்கும் காதல் மலர்ந்தது.இலங்கை வாசியான தர்ஷன் விளம்பர மாடலாவார்.இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்களின் மனதில் பெரும் புகழை அடைந்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார்.

இந்த வகையில் தர்சனும் சனம் செட்டியும் காதலித்து வருவது மக்களிடையே அறியப்பட்ட ஒன்றே.இருப்பினும் இவரது காதல் நிச்சயம் வரை சென்று சில கருத்து வேறுபாடுகளால் நின்றது.அதன் பின் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக ஶ்ரீரெட்டி காவல் ஆணையரிடன் புகார் அளித்ததன் பேரில் இருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரிந்தனர்.சமீப காலமாக இந்த நிகழ்வு சமூக வலைத்தளஙகளில் வைரலாகி வந்த வண்ணம் இருந்தது.அதன்பின் இணையத்தில் தான் தனித்திருக்கும் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த சனம் ஷெட்டி .தற்போது காதலர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் ஒருவரது கையைப்பிடித்தவாறு,நீங்கள் என் உலகத்தை ஒளிர செய்திருகிறீர்கள் மோன் எனவும் “காதலர் தின இரவு விருந்துக்கு நன்றி”என்றும்  பதிவிட்டுள்ளார்.இவரது இந்த பதிவு தர்ஷனை வெறுப்பேற்றுவதற்கா இல்லை உண்மையிலேயே மோன் என்பவரை காதலிக்கிறாரா எனும் பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளது.இருப்பினும் அந்த அதிர்ஷடசாலி மோன் யார் என்றும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.பார்ப்போம் இந்த காதல் எது வரை செல்கிறது என்று..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here