பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல சீசங்களாகவே பல மொழிகளிலும் சிறப்பாக ரசிகர்களுக்கு விருந்து படைத்துகொண்டிருக்கிறது. இப்படி தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார், மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்குகிறார் மற்றும் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இப்படி ஒரு ஒரு மொழிகளிலும் உச்சநட்சத்திரங்கள் தொகுத்து வழங்கிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ஒரு சிலருக்கு பிடித்திருந்தாலும் பல நேர்மறை மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்து தான் வருகின்றனர்.
இப்படி பல மொழிகளிலும் பல எதிர்ப்புகள் வந்தாலும் இந்த நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. இப்படி இருக்க பல மொழி கலைஞர்களும் மற்றும் சின்னத்திரை கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெரும் புகழும் அடைகிறார்கள். இப்படி வெற்றி பெறுபவருக்கு ஐம்பது லட்சம் மதிப்பிலான வீடு அல்லது பரிசு தொகை பணமாக வழங்கபடுகிறது. இதனால் ரசிகர்கள் தனக்கு விருப்பமானவருக்கு தனது வாக்கினை பதிவு செய்கின்றனர், இப்படி வாரம் ஒருமுறை குறைவான வாக்குகள் பெற்றவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகின்றனர.
இப்படி கடந்த மூன்று சீசன்களாக தெலிங்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நாகார்ஜூனா இந்நிலையில் நான்காவது சீசனை தொகுத்து வளங்கபோவது யார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழும்பியுள்ளது. இந்த மூன்று முறையும் ஆண் நடிகர் தொகுத்து வழங்கியதால் இந்த முறை நடிகையினை அணுக உள்ளதாம் தெலுங்கு பிக்பாஸ் குழு, இதனால் நடிகை சமந்தா மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளனராம்.
மேலும் இந்நிகழ்ச்சி இன்னும் ரசிகர்கள் ஆர்வமாக பார்க்க பிரியா வட்லாமணி, ஹம்சானந்தினி, போன்ற நடிகைகளையும் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவைக்க தெலுங்கு பிக்பாஸ் குழு அணுகியுள்ளனர். அவர்களும் விருப்பம் தெரிவித்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் கூடிய விரைவில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என நம்பலாம்..