பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடையே வெகு பிரபலம் எனலாம். அதிலும் தற்போது வெற்றிகரமாக நான்கு சீசன்களை முடித்து ஐந்தாவது சீசனில் காலடி வைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு அடுத்த சீசனுக்குகாக மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள் எனலாம். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமானதை தொடர்ந்து இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கென்று தனித்தனியே ரசிகர்கள் ஆர்மியே வைத்துள்ள்ளார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியும் இதில கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் மக்களிடையே பிரபலமாக உள்ளார்கள்.

பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை காட்டிலும் மக்களிடையே பிரபலமாகதவர்கள் தான் அதிக அளவில் போட்டியாளர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அனிதா சம்பத். என்னதான் இவர் தொலைக்காட்சியில் தினந்தோறும் செய்தி வாசித்து வந்தாலும் அங்கு அவர் பிரபலமானதை காட்டிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமே பெரிதவில் பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து எந்த அளவிற்கு பிரபலமகிரார்களோ அதை காட்டிலும் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் கேலி மற்றும் விமர்சனங்களுக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் அனிதா சம்பத் நிகழ்ச்சியில் இருந்தபோதும் சரி வெளியே வந்த பிறகும் பலவிதமான எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளானர். இதன் காரணமாகவே இவர் வெளியே வந்த பிறகு எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறான நிலையில் சமூக வலைத்தளங்களில் அனிதா சம்பத் அவர்களை ரசிகர் ஒருவர்  தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த அனிதா அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு சரமாரியாக தீட்டி தீர்த்திருந்தார். இவ்வாறான நிலையில் தொடர்ந்து இவருக்கு வரும் நெகடிவ் விமர்சனங்களை விடாது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ்ழ் ஷாரிக்குடன் ஜோடியாக போட்டியாளராக நடனமாடி வருகிறார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன் ஒருவர் அம்மிணியை பங்கமாக கலாயித்து உள்ளார். அதில் அவர் கேவலமா இல்லையா கண்டவன் கூட நிக்குறத பெருமையா போட்ருக்க இத பாத்துமா உன் புருஷன் உசுரோட இருக்கான் என்பது போல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற அனிதா அவருக்கு சாட்டையடி பதிலாக உன் பெட் ரூமா பாரு,  நீ இன்ஷ்டலா என்ன தீட்டி மெசேஜ் பண்ற கேப்ல உன் பொண்டாட்டி வேற யார் கூடயாவது போய்டா போறாங்கா என்று பதில் கொடுத்துள்ளார். என்னதான் கோபமாக இருந்தாலும் ஒரு பிரபலமாக இருந்துகொண்டு இதுமாதிரியான பதில்கள் தவறானது என்று பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here