திரைத்துறையில் தங்களது இயற்பெயரைக்காட்டிலும் திரைப்படங்களில் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகின்றனர். காரணம் அவர்களது கதாபாததிரம் மக்களிடையே நல்லவரவேற்பை பெறுவதோடு மட்டுமில்லாமல் மக்களிடையே அவர்களுக்கு ஒரு அடையாளத்தை பெற்று தருகிறது. அந்த வகையில் விஷ்ணு விஷால்,நிக்கி கல்ராணி, ரோபோ சங்கர்,சூரி நடிப்பில் காமெடியில் கலக்கிய திரைப்படம் தான் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன். இந்த படத்ததில் கதை முழுக்க வரும் கதாபாத்திரத்தின் பெயர் பஷ்பா பருஷன். சுரி இதில் புஷ்பா புருஷனாக நடித்திருப்பார். அதில் வரும் புஷ்பா வேறு யாரும் இல்லை நமது பிக்பாஸ் சீசன் 3 புகழ் ரேஷ்மா பசுபுலேட்டி தான்.

இந்த படத்தில் நடித்தன் மூலம் ரேஷ்மா மக்களிடையை பலத்த வரவேற்பை பெற்றதோடு இல்லாமல் புகழின் உச்சிக்கு சென்றார் எனலாம். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகளான ரேஷ்மா அமெரிக்காவில் தன் படிப்பை முடித்து TV 5 தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார். இதன்மூலம் சன் டிவியில் ஒளிப்பரப்பான ரம்யா கிருஷ்ணனின் வம்சம் தொடரில் முகிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் ஆண்டாள் அழகர்,பகல் நிலவு,அன்பே வா ,கண்ணானா கண்ணை போன்ற பல்வேறு தொடர்களில் நடித்துள்ளார்.

அதன் பின் பிக்பாஸ் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்த ரேஷ்மா தற்போது பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே தனது திருமண வாழ்க்கையை பற்றி கூறி மக்களிடையே ஆழ்ந்த அனுதாபங்களை பெற்றவர் ரேஷ்மா. கோ 2, ஜிகர்தண்டா படங்களில் நடித்துள்ள பாபி சிம்கா ரேஷாமாவின் சகோதரனாவார். தற்போது தனித்து வாழ்ந்து வரும் ரேஷ்மா தனது இணைய பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் எப்போதும் டிரெண்டாக இருப்பவர். இந்நிலையில் தற்போது சற்று உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய ரேஷ்மா தனது மாடர்னான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உமகிழ்வித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் வெறும் குளியல் அறை துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நடனம் ஆடுவது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு மேலும் அவரது ரசிகர்களை சந்தோச கடலில் ஆர்ப்பரிக்க செய்துள்ளார். 43-வயதான ரேஷ்மா இன்னும் இளமையோடு இருப்பதோடு இல்லாமல் தனது  வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.இதோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here