வெளிவந்த பிக்பாஸ் 4-இன் இரண்டாவது ப்ரோமோ வீடியோ – ” தப்புனா தட்டிகேட்ப்பேன் நல்லதுனா தட்டிக்கொடுப்பேன்” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

976

பிக்பாஸ்  முதல் சீசன் முடிந்ததில் இருந்தே அடுத்தடுத்த சீசன் எப்பொழுது வரும் என ரசிகர்கள் ஒரு ஒரு வருடமும் காத்துக்கிடக்கும் அளவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக மாறிப்போனது. இப்படி ஒரு ஒரு முறையும் வித்யாசமான பிரபலங்களை போட்டியாளர்களாக தேர்வு செய்து விறு விருப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது . இப்படி பதினான்கு போட்டியாளர்களுடன் தொடங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதிவரை யார் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து வாக்களித்து வெற்றியாளர்களை அறிவிக்கின்றனர்.

இப்படி தமிழ் பிக்பாஸ் 4வது சீசன் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவிருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போடபட்டது. மீண்டும் அரசு பொழுதுபோக்கு நிகழ்சிகளுக்கு பல தளர்வுகளை கொடுத்த நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதற்க்கான முதல் ப்ரோமோ வீடியோவும் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தது. வெறும் வீடியோ மட்டும் வெளிவந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் அண்ட பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ முடிவடைந்தது.

இந்நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான அடுத்த ப்ரோமோ வெளிவந்துள்ளது, சற்றுமுன் வந்த இந்த ப்ரோமோ வீடியோவில், பொது மக்களுக்கு பல கருத்துக்களுடனும் அறிவுரைகளுடனும் முழு வீடியோவும் காட்சியளிக்கிறது. முடிவில் எப்பொழுதும்போல எதாவது ஒரு பஞ்ச் லைன் சொல்லி முடியும் ப்ரோமோவாக நடிகர் கமல் ” தப்புனா தட்டிகேட்ப்பேன் இல்லனா தட்டிகுடுப்பேன் என்று கூறி முடிக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கம்மேண்டில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர், எப்பொழுது தொடுங்கும் தேதி சொல்லுங்க? யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ பிக்பாஸ் 4இன் இரண்டாவது ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here