பிக்பாஸ் சீசன் 4இல் நுழையும் பிக்பாஸ் வனிதாவின் எதிரி – அட யாருன்னு தெரியுமா?? களைகட்டப்போகும் பிக்பாஸ் நிகழ்ச்சி!!! புகைப்படம் உள்ளே!

2937

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக மூன்று சீசன்களை கடந்து வெற்றிகரமாக அடுத்த சீசனுக்காக அறிவிப்புகளும் வந்துவிட்டன. இந்தியில் இந்த நிகழ்ச்சி பல சீசங்களை கடந்து இன்றும் ரசிகர்களால் விரும்பபடுகிறது. இப்படி இந்தியில் வெற்றிபெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப நினைத்து இன்று அதிலும் வெற்றியும் கண்டு இருக்கிறது.  தமிழில் முதல் சீசனில் யாருக்கும் இந்த நிகழ்ச்சி பெரிதாக அறிமுகம் இல்லாமல் இருந்தாலும் போக போக இந்த நிகழ்ச்சு மிகவும் பிடித்து போனது.

எப்பொழுது 9 மணி ஆகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என ஆவலுடன் பார்க்கும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்துவிட்டது. இப்படி ஒரு ஒரு சீசனிலும் ஒரு ஒருவர் சர்ச்சைகளில் சிக்கி எளிதாக மக்களின் மனதில் பதிந்து போவர்கள். இப்படி ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்விலும் நிகழ்ச்சியிலும் வெற்றிக்கு எளிதான வழியை தேடிக்கொள்வார்கள், கடந்த சீசன்களில் பிக் பாஸ் ஜூலி, நடிகர் மகத், மற்றும் வனிதா போன்றோர் சர்ச்சைகளில் சிக்கி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினர்.

ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த நடிகை வனிதா இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அடுத்தகட்டதையே நெருங்கிவிட்டார் என்றே கூறலாம். அதன்பின்பு பெரிதாக டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க்காமல் இருந்த இவரை விஜய் டிவி விடுவதாய் இல்லை. இப்படி குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் டிவி நிகழ்சிகளில் பங்குபெற்றார் வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சி போல் அல்லாமல் தனது சமையல் கலையை மக்களுக்கு வெளிகாட்டி அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இப்படி இந்த நிகழ்ச்சியில் நல்ல பெயர் எடுத்த அவர் தான் மீண்டும் திருமணம் செயுய்யபோவதாக அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாமல் திருமணத்தை இப்போதே செய்வதாக பத்திரிக்கையும் வெளிவந்து இவருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணமும் நடைபெற்றது. இதுவரை யார் திருமணத்திலும் இப்படி ஒரு சர்ச்சை வந்து இருக்காது என்ற அளவுக்கு இவரது திருமணம் பற்றி பலராலும் பேசப்பட்டது.

இப்படி சூர்யா தேவி என்ற youtube பிரபலம் இவரது திருமணத்தை பற்றி பல அதிரடியான விமர்சனங்களை இணையத்தில் வெளியிட்டார். இதக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் நடிகை வனிதாவும் சூர்யா தேவி பலருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். இப்படிஎ சூர்யா தேவி மக்களிடையே பிரபலமடைந்துவிட்டார். இப்படி தற்போது இவர் இந்த பிக்பாஸ் சீசனில் பங்குபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல சண்டைக்கோழிகள் இந்த சீசனில் நுழையவிருக்கும் நிலையில் இவரும் நுழையபோவதாக வெளிவந்த செய்தி ரசிகர்களுக்கு ஆச்ர்யத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வனிதாவின் பரம எதிரி நுழைய போகிறார் என கிண்டலடித்தும் வருகின்றனர். ஆனால் இவர் உண்மையில் இந்த  நிகழ்ச்சிக்குள் போகபோகிறாரா இல்லை இது வெறும் வதந்தியா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here