தென்னிந்திய சினிமாவில் கடந்த வருடங்களில் இருந்தே ஒரு போதாத காலமாகவே இருந்து வருகிறது எனலாம் காரணம் அந்த வகையில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் எதாவது ஒரு வகையில் எதிர்பாராதவிதமாக காலமாகியும் திரையுலகை விட்டு மறைந்தும் வருகிறார்கள். இப்படி இருக்கையில் தற்போது பிரபல இளம் நடிகையும் பிக்பாஸ் புகழ் போட்டியாளருமான நடிகை யாஷிகா ஆனந்த் அவர்களுக்கு நேற்றிரவு எதிர்பாராதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு தனது நண்பர்களுடன் இரவு உலா சுற்றி வந்த யாஷிகா அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்நிலையில் காரில் இருந்த யாஷிகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அவருடன் இருந்த தோழியான வள்ளிசெட்டி பவானி என்பவர் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே காலமானார்.

இப்படி இருக்கையில் உடனடியாக யாஷிகாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் யாஷிகாவின் மீது மாமல்லபுரம் போலிசார் அதிவேகமாக கார் ஒட்டியது, விபத்து மற்றும் உயிர்சேதம் ஏற்படுத்தியது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருப்பினும் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார் யாஷிகா ஆனந்த்.

மேலும் இவர்கள் நேற்று இரவு பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பியபோது தான் இது நடந்துள்ளது எனவும் பார்ட்டியில் இவர்கள் அதிகம் குடித்து இருக்கலாம் எனவும் பல கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். எது எப்படியோ யாஷிகா எந்த பாதிப்பும் இன்றி விரைவில் குணமாகி வரவேண்டும் என அவரது நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது .

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here