மார்ச் மதம் ஆரம்பித்த இந்த லாக்டவுன் இன்னும் முடிவில்லாமல் சென்று கொண்டே இருக்கிறது. இதற்க்கு எப்பொழுது ஒரு விடிவுகாலம் வரும் என்பது இதுவரை தெரியவில்லை என்பதுதான் உண்மை. லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே பல சினிமா பிரபலங்களும், நட்சத்திர நடிகர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனது அன்றாட வேலைகளை பார்த்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இது ஒரு புறம் இருக்க பல பிரபலங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.

இப்படி பாலிவூட் தொடங்கி தமிழ் சினிமா வரை கொரோனாவால் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்ட செய்தி அத்டிக்கடி செய்திகளில் பார்க்க முடிந்தது. இப்படி பாலிவூட் சூப்பர் ஸ்டாரான அமிதாபட்சனில் தொடங்கி நட்சத்திர நடிகைகளான ஜெனிலியா தமன்னா வரை பலரும் கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இபப்டி தமிழ் சினிமாவில் கூட கடந்த பல மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வந்த செய்தி எது என்று சொன்னால் அது பாடகர் எஸ் பி பி அவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தான்.

முதலில் அவரது உடல் நலத்தை பற்றி பல வதந்திகள் வந்திருந்தாலும் பின்னர்  கொரோனா முழுமையாக குணமடைந்தும் மாரடைப்பின் காரணமாக காலமானார். இப்படி இவரது மறைவிற்கு பொதுமக்கள், ரசிகர்கள், சின்னதியினர், வெள்ளித்திரையினர் என பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர்.

இப்படி ஒரு புறம் கொரோனா பலரையும் அச்சுறுத்தி வர இந்தி சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக விளங்கியவர் ஆசிப் பாஸ்ரா. இவர் அஞ்சான் திரைப்படத்தில் கூட நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். இந்நிலையில் இவர் நேற்று இமாச்சலப்பிரதேசத்தில் காலமானார் இவரது மறைவிற்கு ரசிகர்களும் பிரபலங்களும் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here