தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுவார்கள் அதன் காரணமாக அவர்கள் கூறித்த எந்த செய்தியும் அது எளிதில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடும் அந்த வகையில் இந்த கொரோனா காலக்கட்டத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் சத்தமில்லாமல் தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஸ்ரேயா காஜல் அகர்வால் நயன்தாரா என பலரும் தங்களது இல்லற வாழ்க்கையை துவங்கி விட்டனர் எனலாம். இவர்களின் வரிசையில் பாலிவுட் உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கத்ரினா கைப்.

இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தமிழ் ஹிந்தி தெலுங்கு பல மொழிப்படங்களில் நடித்துள்ள இவருக்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் பலவருடங்களாக சினிமா துறையில் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ந்து நடித்து வரும் கத்ரினா கைப் அண்மையில் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் தென்னிந்திய சினிமா வட்டாரம் மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலத்தில் சவாய் மதப்பூர் எனும் பகுதியில் உள்ள சிக்ஸ் சென்ஸ் எனும் கோட்டையில் மிகவும் பிரமாண்டமான முறையில் திருமண நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதனை தொடர்ந்து கத்ரினா கைப் மற்றும் விக்கி கவுசல் இவர்களது திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது. திருமணத்தை முடித்த கையோடு தனது இனைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் கத்ரினா அந்த பதிவில்

இந்த தருணத்திற்கு எங்களை கொண்ட வந்த அனைவருக்கும் எங்களுடைய இதயங்களில் அன்பும் நன்றியும் தெரிவித்து கொள்கிறோம். இந்த புதிய பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கும் போது உங்கள் அனைவரின் அன்பையும் ஆசிரவாதத்தையும் எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டுள்ளார். இன்னிலையில் இந்த பதிவு மற்றும் திருமணம் கூறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த சந்தோசத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Katrina Kaif (@katrinakaif)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here