தமிழ் சினிமாவில் பொறுத்தமட்டிலும் பல முன்னணி  இயக்குனர்கள் பல வித்தியாசமான கதைகளை கொண்ட நல்ல திரைப்படங்களை மக்களுக்கு கொடுத்து வருகின்றனர். இந்த வகையில் ஒவ்வொரு இயக்குனரும் தனக்கென தனி ஒரு பாணியை திரையுலகில் கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு படத்தை பார்த்தாலே மக்கள் இது இந்த இயக்குனரின் படம் தான் என சொல்லும் அளவிற்கு அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள். இப்படி இருக்கையில் நல்ல குடும்ப கதையம்சங்களை கொண்ட ஒரு சாதாரண மனிதனின் நடக்கும் நிகழ்வுகளை படு தெளிவாக விளக்கும் வகையில் தொடர்ந்து பல நல்ல படங்களை கொடுத்தது மட்டுமின்றி அந்த படங்களில் கதாநாயகனாக நடித்தும் மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை இன்றளவும் வைத்திருப்பவர் தான் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் அவர்கள்.

இவரது படங்கள் அது தனி ஒரு ராகம் தான் எனலாம் அந்த வகையில் அப்பா மகன் பாசம் தொடங்கி காதல் கதை வரை இவர் எடுக்காத படங்களே இல்லை எனலாம். அந்த வகையில் இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான படம் தான் தவமாய் தவமிருந்து இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்திகொண்டவர் தான் நடிகை பத்மப்ரியா.

மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்த அவருக்கு அங்கு கிடைக்காத வரவேற்பு தமிழ் மக்களிடையே பெருமளவு கிடைத்தது எனலாம். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பல மொழிப்படங்களில் தொடர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜாஸ்மின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வகையில் தற்போது இவர் திருமணத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட மாடர்ன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது., அதிலும் இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள கோப்ரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here