சினிமாவில் சாதாரணமாக இருக்கும் மக்கள் பலர் நடிகர்களாவது என்பதே இயலாத நிலை. அதிலும் அவர்கள் என்னதான் திறமை அழகு என இருந்த போதிலும் அவர்களுக்கான வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அப்படியே கிடைத்தாலும் பலர் தொடர்ந்து  திரைபடங்களில் நடிப்பதோ அல்லது அதன் மூலம் பிரபலமடைவதோ இல்லை எனலாம். இவ்வாறாக சினிமாவில் நுழைந்து தனக்கான ஒரு இடத்தை பிடிப்பதோடு நிலைத்து நிற்பதோடு மக்களிடையே பிரபலமாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது.

இந்நிலையில் தனது உடல் ஊனத்தை பெரிதும் பொருட்படுத்தாமல் அதையே தனது பலமாக வைத்து அதன் மூலம் திரையுலகில் நுழைந்து தனது துடிப்பான நடிப்பாலும் நகைச்சுவையான உடல்வாகலும் மக்கள் மனதில் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் எல்லாராலும் செல்லமாக அழைக்கப்படும் கிங்காங். சினிமாவிற்காக தனது பெயரை கொண்ட இவரது உண்மையான பெயர் சங்கர். சாதாரண குடும்பத்த பின்னணியாக கொண்ட இவர் தனது உடல் அமைப்பையே தனது திறமையாக மாற்றி திரையுலகில் பயணிக்க தொடங்கினர். இவர் முதன் முதலில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான அதிசய பிறவியில் காமெடி நடிகனாக அறிமுகமானார்.

அந்த படத்தில் இவர் நகைச்சுவைக்காக ஆடிய நடனம் இன்றளவும் பிரபலமாக உள்ளது. அந்த நடனத்தை பார்த்தால் இன்றைக்கும் சிர்க்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இந்நிலையில் இதன் மூலம் மக்கள் மத்தியில் வெகு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து படங்களில் முன்னணி காமெடி நடிகராக நடிக்க துவங்கினார். 90- களின் காலகட்டத்தில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி செந்தில் அவர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் வைகைபுயல் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் இவரும் இடம் பிடித்து இருப்பார். மேலும் இவர் தமிழை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம்,மலையாளம், என பல மொழிகளில் 300- க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பு திறமையை பாராட்டி தமிழகத்தில் வேலூரில் உள்ள கல்லூரி இவருக்கு 2017-ம் ஆண்டு டாக்டர் பட்டத்தையும் வழங்கி உள்ளது. மேலும் இவர் பல தேசிய விருதுகளையும் வாங்கியுள்ளார். இவ்வாறு திரையுலகில் முன்னணி பிரபல காமெடியனாக வலம் வரும் கிங்காங் அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளார்கள் என்பது பலருக்கு தெரியாத நிலையில் சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இப்படி இருக்கையில் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here