தென்னிந்திய சினிமாவை பொறுத்த போதிலும் திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அவர்களை காட்டிலும் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும். அந்த வகையில் அந்த காலத்தில் பல நடிகர்கள் வில்லத்தனத்தில் படங்களில் கலக்கியதோடு பல மக்களின் மனதிலும் தங்களது சிறந்த நடிப்பால் அவர்களை மிரட்டியுள்ளனர் அவர்களை பார்த்தாலே மக்கள் மிரண்டு போகும் அளவிற்கு நடித்து பலத்த வரவேற்பை பெற்றுள்ளனர். இருப்பினும் இவ்வாறு பல முன்னணி படங்களில் வில்லனாக நடித்து பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள் தற்போழுது திரைப்படங்களில் தங்களது வில்லத்தனத்தை முழுவதும் தவிர்த்து காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர்களான ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், பொன்னம் பலம் போன்ற பல நடிகர்கள் தற்போது சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் வரிசையில் ஆரம்பத்தில் திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் தான் மொட்டை ராஜேந்திரன். இவர் பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் பிரபல நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படமான நான் கடவுள் படத்தில் முதன் முதலாக வில்லனாக அறிமுகமானார்.

நடித்த முதல் படத்திலேயே மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த புகழை அடைந்ததோடு தனக்கென தனி அடையாளத்தையும் சினிமாவில் தக்க வைத்து கொண்டார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டி வந்தவர் அப்படியே அதை முழுவதும் தவிர்த்து தற்போது காமெடியில் முன்னணி காமெடி நடிகர்களுக்கு போட்டியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இப்படி இருக்கையில் மொட்டை ராஜேந்திரன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவரது மொட்டை தலை கரகரத்த குரல் மற்றும் அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்பு தான். தனது நெகட்டிவையே பாசிட்டிவாக மாற்றி திரையுலகில் கலக்கி வரும் இவரின் இளமை காலத்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் தலையில் முடியுடன் பார்ப்பதற்கு ஹீரோவை போல் போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் பலர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருவதோடு பல்வேறு நல்ல விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here