தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்கள் தான் பெருமளவு மக்கள் மத்தியில் பிரபலமடைவதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டளாத்தையே உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மூலம் பல நடிகர் நடிகைகள் பிரபலமாக உள்ளதோடு பலரது வாழ்க்கையை மாற்றி உள்ளது எனலாம். இந்நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு இதில் கலந்து பலரது வாழ்க்கையை மக்கள் மத்தியில் உயர செய்துள்ளது.

அந்த வகையில் இதன் வெற்றிகரமான இரண்டாவது சீசனில் குக் காக கலந்து கொண்டு பலரது கவனத்தை தன பக்கம் இழுத்ததோடு பெரும் வரவேற்பை பெற்றவர் தான் பிரபல திரைப்பட நடன இயக்குனர் பாபா பாஸ்கர். இவர் முதன் முதலில் கடந்த 2006-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் தனுஷ் அவர்கள் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் பெரும்பாலும் தனுஷ் அவர்களின் படம் என்றால் அதில் நிச்சயம் இவர் தான் நடன இயக்குனராக இருப்பார். இவ்வாறு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு நடன இயக்குனராக இருந்துள்ளார். மேலும் இந்த பிரபலத்தின் மூலம் இவர் தெலுங்கில் நடத்தப்படும் பிக்பாசில் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருந்த போதிலும் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் அடையாளத்தை கொடுத்தது என்னமோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. மேலும் பாபா பாஸ்கர் அவர்கள் தனது இணைய பக்கத்தில் தனது மகளின் பூப்புனித விழாவின் புகைப்படங்களையும் வெளியிட்டு அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here