பொதுவாக வெள்ளித்திரை காட்டிலும்  சின்னதிரையில் பல புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வந்த வண்ணம் உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைகாட்சிகளில் எண்ணற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகின்றனர். அந்த வகையில் சமயல் சார்ந்த நகைச்சுவை நிகழ்ச்சியாக ஒளிபரபட்டதுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.  இந்நிகழ்ச்சித் தான் தற்போது அதிக ரசிகர்களை  ஈர்த்து வருகிறது. குக்கிங் ரியாலிட்டி நிகழ்ச்சியை இவ்வளவு காமெடி எடுத்து செல்லமுடியாம என்ற அளவிற்கு  ரசிகர்களை கவர்ந்து முக்கியமான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

வித்தியாசமான இந்த சமையல் நிகழ்ச்சியில் நகைச்சுவை சேர்ந்ததால் மக்கள் அனைவரும் விரும்பி பார்த்தனர். மேலும் இந்த நிகழ்ச்சி டி.ஆர்பியில் முதல் இடத்தை பிடித்தது. இந்நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் மற்றும் ஜெப் தாமு இருவரும் வழி நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியாளர்கள் சமைத்த உணவை சாப்பிட்டு பார்த்து அவர்களின் மனம்  கோணாமல் அதே சமயத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியின் மூலம்  கலந்து கொண்ட போட்டியாளர்கள் தற்போது பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகின்றனர். அதிலும் ஜெப் தாமு கோமாளியுடன் சேர்ந்து செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். விஜய் டிவியின் ஆரம்ப காலத்தில் இருந்தே சமையல் நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வந்தவர் தாமு. இவர் சமையல் வல்லுனர்களில் முக்கியமாவர் ஆவார். அவர் ஏற்கனவே சமையல் சார்ந்த பல விருதுகளை பெற்றுள்ளார்.

தாமு உடல் அமைப்பில் குண்டாக இருந்தாலும் அவர் செய்யும் செல் செல்ல சேட்டைகள் தான் ரசிகர்களை கவர்ந்து இவரை பிடித்து போக காரணமாக அமைந்தது. மேலும் இந்நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு ஒருவர் மட்டும் காரணம் அல்ல  இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமளி ,மற்றும் குக் மற்றும் நடுவர்கள் சிறப்பாக செயல்பட இந்த நிகழ்ச்சி குறிப்பிட்ட காலத்தில்லேயே  ரசிகர்கள் மிக பெரிய அளவில் பிரபல அடைந்தது.  ஜெப் தாமு முதன் முறையாக அவருடைய சமூக வலைதள பக்ககங்களில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .தற்போது அந்த புகைப்படத்தை ரசிகர்கள் தாமு அவர்களுக்கு இவள பெரிய அழகான  மகளா என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here