இப்போதைய நிலைப்படி பார்த்தால் வெள்ளித்திரையை ஓரம்கட்டி சின்னத்திரை நிகழ்ச்சிகளே முதன்மை ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனலாம் அந்த அளவிற்கு சின்னத்திரையில் வெளிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மக்களிடையே பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதொடு தொடர்ந்து பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது .

இந்நிலையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பான சமையல் கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வேற லெவலில் ஹிட்டடித்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது ரசிகர்களாக மாற்றிக்கொண்டது இந்த நிகழ்ச்சி. மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் நகைச்சுவை கலந்த இந்த நிகழ்ச்சி பலரது கவனத்தை தன் பக்கம் வெகுவாக கவர்ந்தது. சொல்லப்போனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓரம்கட்டும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி இருந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசனிலும் குக்க்குகளாக பல புதுமுக பிரபலங்கள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொண்டனர்.இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக வந்த பலரும் தற்போது சினிமாவில் நடிகர்களாக வலம் வந்த உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியின் இந்த அபரிவிதமான வெற்றிக்கு முதன்மை காரணமாக இருந்தவர்கள் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக கலந்து கொண்ட செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் அவர்கள் தான். சற்றும் தங்களது பிரபலத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் கோமாளிகள் மற்றும் குக்குகளுடன் சகஜமாக காமெடியாக நடந்து கொண்ட விதமே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முதற்காரணம் எனலாம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முன்னணி நடுவரான செப் தாமு அவர்கள் கின்னஸ் சாதனை விருது வென்ற ஒரு தலைமை செப் ஆவார். பல சாதனைகளை தனது சமையல் கலையின் மூலம் காண்பித்த தாமு அவர்கள் அவரின் அடுத்த பரினமமாக நகைச்சுவையிலும் கலக்கி வருகிறார். இவ்வாறு இருக்கையில் செப் தாமு அவர்களின் இளம் வயது புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here