வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையிலும் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளது மேலும் மக்கள் மத்தியில் பெருமளவு பார்க்கபடுவதோடு அதில் வரும் நடிகர் நடிகைகளும் மக்களிடையே பிரபலமாக உள்ளார்கள் எனலாம். அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ அதை காட்டிலும் அதில் வரும் நடிகர் நடிகைகள் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக உள்ளார்கள்.

இந்த வகையில் இந்த சேனலில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது அதில் முதன்மையான நிகழ்ச்சி என்றால கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சமையல் போட்டி நிகழ்ச்சியாகி வெளியாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ,மற்ற சமையல் நிகழ்ச்சிகளை போல இல்லாமல் நகைச்சுவை கலந்த சமையல் போட்டி நிகழ்ச்சியாக அறிமுகமாகி பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலமானார்கள் அதனை தொடர்ந்து இதில் பலர் சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையில் பிரபலமாகி பல படங்களில் நடித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் இவர்களை காட்டிலும் மிக பிரபலமானவர்கள் என்றால் அது கோமாளியாக வரும் நடிகர் நடிகைகள் தான். அந்த வகையில் இதில் கோமாளியாக வந்து பலரது மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் மணிமேகலை. இவர் ஆரம்பத்தில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீ. ஜே வாக தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் அதன் பின்னர் அந்த சேனலை விடுத்து விஜய் டிவியில் களம்புகுந்தார். மேலும் இவர் நடன மாஸ்டர் ஆன உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இருவரும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதோடு மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார்கள். இந்நிலையில் மணிமேகலையின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அது கடந்த 2010-ம் ஆண்டு நடந்த அழகிபோட்டி ஒன்றில் அந்த போட்டியில் சிறந்த கூந்தல் அழகுக்காக பட்டத்தையும் வென்றுள்ளார். இந்நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here