சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் வெளிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கி தொடர்கள் வரை அனைத்துமே மக்கள் மத்தியில் வெகு பிரபலம் எனலாம். அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெறுவதை தொடர்ந்து அந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தங்களுக்கென தனி அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் இந்த சேனலில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றி நடைபோட்டு பலரது மனதை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு மக்கள் இடையே பெரிதளவில் நல்ல வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றிருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளிகளாக பல புதுமுக மற்றும் பரிட்சயமான பலர் கலந்து கொண்ட

நிலையில் இதில் குக்காக கலந்து கொண்டு அதன்பின் கோமாளியா குக்கா என தெரியாமல் பலரை தனது காமெடியான பேச்சால் பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தவர் நகைச்சுவை நாயகன் மதுரை முத்து. இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் வெளிவந்த அசத்தபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

தனது சரளமான நகைச்சுவையால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த மதுரை முத்து சமீபகாலமாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது பள்ளிபருவ புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் மதுரை முத்து அவர்கள். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன மதுரை முத்துவா என ஆச்சர்யத்துடன் வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here