சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் பிரபலமடைந்து வந்தாலும் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடையே எப்பொழுதும் தனி ஒரு வரவேற்பு இருந்தே வருகிறது. அந்த வகையில் கிச்சன் சூப்பர் ஸ்டார், சமையல் சமையல் போன்ற பல சமையல் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் நீண்ட காலம் மக்களிடையே பெரிதளவில் பேசப்படவில்லை. வெள்ளித்திரையில் படங்களை தான் காபி அடித்து எடுகிறார்கள் என்றால் அவர்களை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரையில் சேனலுக்கு சேனல் நிகழ்ச்சிகளை காப்பி அடிப்பதில் கைதேர்ந்தவர்கள் ஆகிவிட்டனர்.
இதனால் அனைத்து தொலைக்காட்சிகளிலும் சமையல் நிகழ்ச்சியானது ஒளிப்பரப்ப பட்டதால் மக்களிடையே சமையல் நிகழ்ச்சிகளை பார்ப்பதை சலுப்படைய செய்து விட்டது.இந்நிலையில் புதுபுது நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை டிரெண்டிங்கில் வைத்திருக்கும் விஜய் தொலைக்காட்சியில் 2019-ம் ஆண்டு ஒளிப்பரப்பட்டது தான் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சி.இது மற்ற சமையல் நிகழ்ச்சிகளைப் போல வெறும் சமையலை மட்டும் கொண்டதாக இல்லாமல் நகைச்சுவை கலந்த போட்டித்தொடராக உருவானது.இதில் நன்கு சமையல் தெரிந்த 8 பேர் குக்காகவும் அவர்களுக்கு கோமாளியாக சமையல் தெரியாத 8 பேர் அவர்களை தொந்தரவு செய்யவும் என சமையல் நிகழ்ச்சியையே ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி போல உருவானது தான் குக் வித் கோமாளி.
இதில் புகழ்,பாலா,சரத்,சிவாங்கி,சுனிதா,தங்கத்துரை,சக்தி,மணிமேகலை என ஒரு நகைச்சுவை பட்டாளமே களமிறங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் பொழுது இந்த அளவுக்கு பிரபலமடையுமா என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓரம் தள்ளி ரச்கர்களின் மனதில் சிம்மசொப்பணமாக உள்ளது குக் வித் கோமாளி. தற்போது இந்த நிகழ்ச்சி முதல் சீசனை முடித்து இரண்டாவது சீசனானது வெற்றிக்கரமாக ஓடி வருகிறது. இதற்கு காரணம் நடுவர்கள் ,தொகுப்பாளர்,குக் மற்றும் கோமாளிகள் சமையல் எனும் பெயரில் செய்யும் சேட்டை மற்றும் ரகளகளே.
இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் எவ்வளவு பேமஸானதோ அதைக்காட்டிலும் பல மடங்கு பிரபலத்தையும் வரவேற்பையும் இரண்டாவது சீசன் பெற்றுள்ளது.ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் பங்குபெறுபவர்கள் எந்த அளவிற்கு பிரபலமடைகிறார்களோ அந்த அளவிற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படும். அந்த வகையில் குத் வித் கோமாளி நிகழ்ச்சியிலீ அவர்வர் வாங்கும் சம்பளம் பின்வருமாறு.இது ஒரு எபிசோடுக்கு அவர்கள் வாங்கும் சம்பள விவரம்…..
சகீலா-50000/
பாபா பாஸ்கர், மதுரை முத்து-40000/
அஸ்வின்-25000/
தர்ஷா குப்தா , பவித்ரா-10000/
மணிமேகலை, சிவாங்கி,சுனிதா-20000/
பாலா, புகழ்-15000/
என்னத்தான் இவர்கள் தன் சமபளத்தை ஆயிரங்களிலும் வாஙகினாலும் இவர்கள் கொள்ளைக்கொண்ட ரசிகர்களோ கோடிக்கணக்கானவர்கள்.அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர்.இன்னும் சிறிது காலங்களில் இவர்களை நாம் வெள்ளித்திரையில் பார்க்கலாம்…..