தற்போது தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு பல நல்ல கதையம்சங்கள் கொண்ட பல வெற்றி படங்களை கொடுத்து வருகின்றனர். மேலும் தற்சமயம் பெரும்பாலும் வெளிவரும் படங்கள் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தே பல படங்கள் வெளியாகி வருகிறது. இந்த வகையில் பல முன்னணி இயக்குனர்களுக்கு போட்டியாக தற்போது பல இயக்குனர்கள் வந்த போதிலும் பல முன்னணி இயக்குனர்கள்  இன்றளவும் மக்கள் மனதில் தங்களுக்கென தனி ஒரு நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார்கள்.

அந்த வகையில் ஒவ்வொரு இயக்குனர்களும் தங்களுக்கென தனி ஒரு பாணியை இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். சொல்லபோனால் ஒரு படத்தை பார்த்தாலே அந்த இயக்குனரின் படம் தான் என்று சொல்லிவிடும் அளவிற்கு தங்களது பாணியை படத்தில் எளிதாக தெரியும் வகையில் நல்ல கதைகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பதோடு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி இயக்குனர் பாலா.

இவரது படங்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். மேலும் பல முன்னணி நடிகர்களும் இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் இதனை தொடர்ந்து இவரது படங்கள் கிராமத்து கதையை மையமாக வைத்தே எடுக்கப்படும். இந்நிலையில் இறுதியாக பாலா அவர்கள் ஜோதிகாவை வைத்து நாச்சியார் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மீண்டும் சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வணணம் உள்ளது.

இந்த படத்தில் ஹீரோவாக இவரது ஆஸ்தான நடிகரான அதர்வா நடிக்க உள்ளதாகவும் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த படத்தில் நடித்தால் மேலும் பட வாய்ப்புகள் வருமா என்பது போன்ற பல கேள்விகளும் கருத்துகளும் தொடர்ந்து சினிமா வட்டாரத்தில் கசிந்த வண்ணம் உள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here