தமிழ் சினிமாவில் தற்போது பொருத்தவரை அந்த காலம் போல் இல்லாமல் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய நல்ல படங்கள் வெளியாகி வருகிறது. அதேபோல் தற்போது பல புதுமுக இயக்குனர்களும் தொடர்ந்து பல நல்ல கருத்து உள்ள படங்களையும் மாறுபட்ட கதையம்சங்களையும் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு பிரபல முன்னணி இயக்குனர்களும் தங்களுக்கென தனி பாணியை வைத்து கொண்டு அதை மாற்றாமல் அதற்கு தகுந்தாற்போல் பல பிரமாதமான படங்களை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல முன்னணி இயக்குனர் மிஸ்கின் அவர்களின் படங்கள் என்றாலே சொல்ல தேவையில்லை அந்த அளவிற்கு படத்தை பார்த்ததும் இது இயக்குனர் மிஸ்கின் அவர்களின் படம் தான் என சொல்லி விடலாம் அந்த அளவிற்கு தனது படங்களில் பல மாறுபட்ட கதைகளையும் திருப்பங்களையும் மேலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பல நல்ல படங்களை இயக்கியுள்ளார். மேலும் அணைத்து முன்னணி இயக்குனர்கள் போலவே இவரும் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர் இந்நிலையில் இவர் பிரபல முன்னணி இயக்குனரான வின்சென்ட் செல்வாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குனராக உருவெடுத்து சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் இயக்குனர் என்பதை தாண்டி ஒரு நடிகரும் ஆவர் அந்த வகையில் இவர் தளபதி விஜய் அவர்களுடன் யூத் படத்தில் நடித்துள்ளார் மேலும் இதனை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஸ்கின் அவர்களின் படங்களை போலவே இவரும் நிஜ வாழ்க்கையிலும் சற்று வித்தியாசமானவரே அந்த வகையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மிஸ்கின் அவர்கள் தனது சிறுவயதில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை வெளிபடையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் சிறுவயதில் நான் அந்த மாதிரி புக் படித்து கொண்டிருக்கும் போது திடீரென எனது அம்மா வந்து விட்டார்கள் நான் என்ன செய்வது என்று தெரியாமல் அதை மேஜைக்கு கீழே போட்டுவிட்டு அப்படியே ஓடி விட்டேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்து போது அந்த புத்தகம் எனது மேஜையில் எதோ ஒரு பொருளை வைத்து அந்த புத்தகம் பறக்காத படி எனது அம்மா வைத்து சென்று இருந்தார்கள். அதை பார்த்ததும் எனது மனம் நெகிழ்ச்சியடைந்து போனது என மனமுவந்து கூறியிருந்தார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பலவேறு கருத்துகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here