தென்னிந்திய சினிமாவில் தற்போது பல புதுமுக இயக்குனர்கள் பலர் வந்த போதிலும் பல முன்னணி இயக்குனர்கள் தொடர்ந்து சினிமாவில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்து இருப்பதோடு மக்கள் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் விடாமல் பிடித்து வைத்துள்ளனர். மேலும் ஒவ்வொரு இயக்குனரும் தங்களுக்கென தனி ஒரு பாணியை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்கள் இந்த வகையில் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பிரமாண்டம் என்றாலே அதற்கு பெயர்போனவர் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர்.

இவரது படங்களுக்கு எப்பொழுதும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த காலம் தொடங்கி  இந்த காலம் வரை தனது பிரமாண்டமான இயக்கத்தால் தொடர்ந்து முன்னணி இயக்குனர்களில் வலம் வந்துகொண்டுள்ளார். இந்நிலையில் 57-வயதாகும் இயக்குனர் சங்கர் தனது இளமை பருவத்திலேயே ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா சங்கர் , அதிதி சங்கர் மற்றும் அர்ஜித் சங்கர் என இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.

இந்நிலையில் மூத்த மகளான ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இவரது இரண்டாவது மகளான அதிதி சங்கர் தற்போது சூர்யா தயாரிப்பில் பிரபல நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இந்த பட துவக்க பூஜையின் போது இயக்குனர் சங்கர் அவர்களின் மகன் அர்ஜித் சங்கரும் கலந்து கொண்டார்.

மகளை தொடர்ந்து மகனையும் சினிமாவில் கதாநாயகனாக களமிறக்கபோவதாக பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் சங்கர் அவர்களின் மகன் அர்ஜித் சங்கர் அவர்களின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அதிதி சங்கர் அவர்களை தொடர்ந்து அர்ஜித் சங்கர் அவர்களையும் விரைவில் சினிமாவில் ஹீரோவாக எதிர்பார்க்கலாம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here