தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகைகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் காமெடி நடிகைகளுக்கும் கொடுக்கப்பட்டு தான் வருகிறது. இந்த வகையில் காமெடி நடிகைகளின் ஜாம்பவான் மனோரமா மற்றும் கோவை சரளா தான். இவர்கள் இருவருமே காமெடி நடிகைகளாக 100 படங்களுக்கு மேல் பணியாற்றி பல விருதுகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வரிசையில்
காமெடி கதாநாயகியாக வளர்ந்து வரும் இந்த கதாநாயகிக்கு தற்பொழுது செல்வராகவன் இயக்கத்தில் படம் ஒன்றில் நடித்து வருகிறாராம்.

இவர் செல்வராகவன் மனைவிக்கு நெருங்கிய சொந்தம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு ஆண்டுகள் திரையுலகில் பணியாற்றினாலும் உறவினர்கள் மற்றும் உறவு முறைகள் எல்லாம் செல்வராகவனுக்கு தெரியாதாம். இந்த காமெடி கதாநாயகி சந்தானத்துடன் இணைந்து ‘இனிமே இப்படிதான்’,’வீரம்’ போன்ற மெகாஹிட் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தனது குழந்தை பருவத்தில் இருந்தே தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

உடல் எடை அதிகமாக உள்ள காரணத்தால் இவருக்கு காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது எந்த பட வாய்ப்புகளும் கிடைக்காத நிலையில் இந்த கதாநாயகி தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மில் பயங்கரமாக உடற்பயிற்சிகளை செய்து தன்னுடைய உடல் எடையை தாறுமாறாக குறைத்து உள்ளார். உடல் எடையை குறைத்த இந்த கதாநாயகி வித்யுலேக்காவிற்கு பட வாய்ப்பு கிடைத்ததோ என்னவோ தன்னுடைய வாழ்க்கை துணை கிடைத்து விட்டது.

இவருடைய திருமணம் நிச்சயத்திற்கு வந்திருந்த செல்வராகவனுடன் வித்யுலேகா எடுத்து கொண்ட புகைப்படதை வித்யுலேகா தன்னுடைய இன்ஸ்டக்ராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். செல்வராகவன் வித்யுலேகாவிற்கு தம்பி முறை ஆகிறாராம். இந்த தகவல் வெளியாகி மக்களிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அம்மிணி தன் உடல் எடையை அப்படியே குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஹீரோயின் போல் மாறியுள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here