தமிழ் சினிமாவில் தற்போது வெளிவரும் படங்கள் பெரும்பாலும் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல முன்னணி இயக்குனர்களும் அதற்கு ஏற்றாற்போல் பல சிறந்த கதைகளை நமக்கு படமாக்கி தந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் ஒவ்வொரு இயக்குனரும் தங்களுக்கென தனி ஒரு பாணியை இன்றளவும் விடாமல் கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல மாறுபட்ட கதையம்சங்களை கொண்ட படங்களை உருவாக்கி அதனை மக்கள் மத்தியில் வெளிபடுத்தி அது போன்ற கதைகளை எடுப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் பிரபல முன்னணி இயக்குனர் செல்வராகவன்.

மேலும் இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் அந்த அளவிற்கு தனது படங்களின் மூலம் அனைவரது மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர். ஆரம்பத்தில் தனது தம்பியும் பிரபல முன்னணி நடிகருமான தனுஷ் அவர்களை வைத்து இவர் இயக்கிய படங்கள் மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்கப்பட்டது. இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அணைத்து படங்களும் மக்கள் மத்தியில் ஒரு பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது எனலாம். இந்நிலையில் பிரபல நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த போது அவ்வளவாக மக்களிடையே வரவேற்பை பெறவில்லை எனினும் சில மாதங்களில் அந்த படம் தென்னிந்திய சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றது.

இவ்வாறு பல சிறந்த படங்களை இயக்கிய செல்வராகவன் இறுதியாக பிரபல முன்னணி நடிகர் சூர்யா அவர்களை வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கியிருந்தார் இந்த படம் ரசிகர் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறு தொடர்ந்து பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வந்த செல்வராகவன் தற்சமயம் ஹீரோவாக புது அவதாரம் எடுத்துள்ளார். பிரபல இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கம் சாணிக்காயிதம் எனும் படத்தில் கதாநாயகனாக முதன் முதலில் திரையுலகில் அறிமுகமாக உள்ளார்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படபிடிப்பு வேலைகள் வெகு வேகமாக நடந்து வரும் நிலையில் செல்வராகவன் இந்த படத்திற்காக தனது உடல் எடையை கூட்டி கட்டுமஸ்தான உடல் தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து செல்வராகவன் பிரபல நடிகர் தனுசை வைத்து நானே வருவேன் படத்தை இயக்க உள்ளார் என்றதகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here